Our Blog

பரதவ தீவுகள் (பகுதி 1)

பரதவ தீவு என பரதவர் நாம் உரிமை பாராட்டி கொண்டாட வேண்டிய தீவுகள் இவை, காரணம்..........

பரதவர் எனும் பண்டை தமிழ் திணை தொல்குடி அயலார்களின் கொடுவாளி லிருந்து தப்பித்து இன்று பரதவர் என சரித்திரங்களை மீட்டெடுக்க உயிர் தந்த பரவனின் கன்னித் தீவுகள் இவை......

(1) 1532ல் முத்து குடி பணியார பாம்பட கலவரம் பரதவன் தலைக்கு நாலு பணம் தலை தலையாய் கொய்யப் பட்ட போது தலைமறைவான பரதவ சமூகத்திற்கு தலைமறைவு வாழ்க்கை தந்து தலை தப்பிக்க வைத்த தலைமன்னார் தீவுகள் நான் சொல்லும் 23 பரதவ தீவுகள். 1532 லிருந்து சுமார் 4,5 வருடங்களுக்கு மேலாக பரதவர்கள் குழந்தையும், குட்டியுமாக தலைமறைந்து வாழ்ந்தது இங்கே தான்

(2) 1537 ல் மதமாற்றம் கிருத்துவ போத்துகீசிய பின் புலத்தில் கடலை மீட்டெடுத்தோம் ஆனால்..... ஆனால் 1539ல் மீண்டும் காவலாய் இருந்த போர்சுகீசிய கடற்படை கொச்சின் திரும்பிய நாளில்  கோழிக்கோடு சமாரின்  படைகளால் குமரி முதல்  வேம்பார் வரை பரதவ கிராமங்களும், பரதவ உயிர்களும் உடமைகளும் சூரையாடப் பட்டது. ஆயிரமாயிரம் பரதவர்கள் மடிந்தார்கள். அப்போதும் தப்பி பிழைக்க பரதவர்கள் தேடியது இந்த தீவுகளைத் தான்.

(3) மீதமிருந்த பரதவ இறைஞர்கள் (இன்று பரதவனாய் நான் வாழ காரணமாய் இருந்த முப்பாட்டன் எனக்கு இறைஞன் தானே) புறநானூறு வீரம் காட்டி வென்றெடுத்த வேதாளை போர்களத்தின் போர் வியூக கேந்திரமே கரைதீவு எனும் முசல் தீவுதான்.

(4) கீழக்கரை, காயல்பட்டணம் எனும் மூர்களின் குடியேற்றங்கள் சிதைக்கபட்டு மீண்டும் கரை வாழ்வு வாழ்ந்த போது பழி வாங்க காத்திருந்த நாயக்க அரசும், மூர் இன சமாரியனும் கை கோர்த்து 15 வருடங்கள் கழிந்து 1555 லே புன்னக்காயலை முற்றுகையிட்டு பெர்சிய கடல் கொள்ளையன் இரப்பாளி மூலம் கையகப்படுத்திய போது கீழக்கரையில் பாய் விலக்கி இளைப்பாறியிருந்த இரப்பாளியின்  கொள்ளையர் பட்டாளத்தை  பரதவ தலைமை பட்டங்கட்டி மார்  பதுங்கி கிடந்தது பாய்ந்து தாவி அடித்து காயல் நகரை மீட்டெடுத்ததும் இந்த தீவுகளின் மூலம் தான்.

இன்னும் இருக்கிறது இதற்கான தரவுகள்

அதற்கு முன்பு  பரதவ தீவுகளின் பெளதீக அமைப்பை பார்ப்போம்.....

1 வான் தீவு [ 0.160 சதுர கிமி ] 
2 காசு பார் தீவு [ 0.195 சதுர கிமி ] 
3 கரையச்சுழி தீவு [ 0.165 சதுர கிமி ]
4 விலங்குச்சுழி தீவு [ 0.010 சதுர கிமி ]
5 உப்புத் தண்ணி தீவு [ 0.295 சதுர கிமி ]
6 புழுவுன்னி சல்லி தீவு [ 0.062 சதுர கிமி ]
7 நல்ல தண்ணி தீவு [ 1.10 சதுர கிமி ]
8 அண பார் தீவு [ 0.11 சதுர கிமி ]
9 வாடை மடை தீவு [ 0.067 சதுர கிமி ]
10 அப்பத் தீவு [ 0.286 சதுர கிமி ]
11 பூவரசன் பட்டி தீவு [ 0.003 சதுர கிமி ]
12 தளரி தீவு [ 0.752 சதுர கிமி ]
13 வலைத் தீவு [ 0.102 சதுர கிமி ]
14 முள்ளி தீவு [ 0.103 சதுர கிமி ]
15 கரைத்தீவு / முசல் தீவு [ 1.31 சதுர கிமி ]
16 மணலி தீவு [ 0.25 சதுர கிமி ]
17 மணலி குட்டித் தீவு [ 0.024 சதுர கிமி ]
18 பூமறிச்சான் தீவு [ 0.166 சதுர கிமி ]
19 புலி வாசல் தீவு [ 0.30 சதுர கிமி ]
20 குருசடி தீவு [ 0.66 சதுர கிமி ]
21 சிங்லே தீவு [ 0.13 சதுர கிமி ]

Thoothukudi (Tuticorin) group (Four Islands):
1. Vaan Tivu, 16.00 ha, 8.83639°N 78.21047°E
2. Koswari Island, 19.50 ha, 8.86879°N 78.22506°E
3. Kariyashulli Island, 16.46 ha, 8.95409°N 78.25235°E;
*4. Vilangushulli Island, 0.95 ha, 8.93815°N 78.26969°E.
*Due to excessive coral mining, 
Vilangushulli Island island is now 
1 metre below mean low tide level.

There were two more islands named Pandayan and Punnaiyadi at 8.78075°N 78.19536°E. But these were destroyed during the construction of the new artificial deep-sea Tuticorn Port.
There are numerous other nondescript islands located close to Thoothukudi city. Of these Muyal (or Hare) Thivu and Nalla Thanni Islands attract visitors during weekends and festival seasons.

Vembar group (Three Islands):
5. Uppu Thanni Island, 22.94 ha, elevation 4 m, 9.08921°N 78.49148°E
6. Puluvinichalli Island, 6.12 ha, elevation 5.5 m, 9.10320°N 78.53688°E
*7. Nalla Thanni Island, 101.00 ha, elevation 11.9 m, 9.10667°N 78.57885°E.
*Nalla Thanni Island island was populated recently.

Kilakarai group (Seven Islands):
8. Anaipar Island, 11.00 ha, elevation 2.1 m, 9.15294°N 78.69481°E
9. Valimunai Island, 6.72 ha, elevation 1.2 m, 9.15354°N 78.73052°E
10. Appa Island, 28.63 ha, elevation 6.4 m, 9.16582°N 78.82596°E
11. Poovarasan Patti, 0.50 ha, elevation 1.2 m, 9.15413°N 78.76695°E
12. Talairi Island, 75.15 ha, elevation 2.7 m, 9.18133°N 78.90673°E
13. Valai Island 10.10 ha, elevation 3.0 m, 9.18421°N 78.93866°E
14. Mulli Island, 10.20 ha, elevation 1.2 m, 9.18641°N 78.96810°E;

Mandapam group (Seven Islans):
*15. Musal or Hare Island, 124.00 ha, elevation 0.9 m 9.19912°N 79.07530°E
16.Manali Island, 25.90 ha, 9.21564°N 79.12834°E
17. Manali-Putti Island, 2.34 ha 9.21581°N 79.12800°E
18. Poomarichan Island, 16.58 ha 9.24538°N 79.17993°E
19. Pullivasal Island, 29.95 ha 9.23699°N 79.19100°E
*20. Kurusadai Island, 65.80 ha 9.24690°N 79.20945°E
21. Shingle Island, 12.69 ha, elevation .6m 9.24174°N 79.23563°E.

Thanks to Mr T. V. Antony Raj Fernando
For more details visit https://tvaraj.com/

- கடல்புரத்தான் 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.