Our Blog

விடிந்தகரை 2.03

ஆத்திய காலந்தொட்டே இது பரவமார் தேசமாணும் பாண்டியமார் நாடாணும் கங்கன் என்னா கொம்பனா..!! கேள்வி வந்த திசை நோக்கி கோபத்துடன் திரும்பினார்... அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள். அங்கே அம்மச்சா கோவில் ஆச்சாரியார் அரசரின் கோப பார்வையால் நடுங்கி தலை குனிந்தார். ஆவேசமான அரசர் சொன்னார்

ஓ என்டே கொச்சி ஆச்சாரி
எந்தா பரைஞ்சி
கொம்பனா ணோன்னு
கங்கமார் மாத்திரமல்ல, கங்கன்டே
பரவமாரு ஒக்க வலிய கொம்பமாராணும்
அவமாரு சரியேத்திரம்
நிங்களுக் கெல்லாம் அறிஞ்சோடா பட்சே
ஈ திருவிதாங்கூர் சமஸ்தானத்து
மகராசமாருக்கு ஒக்க அறியாம்

ஆத்திய காலந்தொட்டே இது
பரவமார் தேசமாணும்
பாண்டியமார் நாடாணும்
கொச்சு ஆச்சாரி
ஞான் உரைக்கின்னது உரப்பாணும்
இவமாரே ஆத்திய ஜனசங்கல்பம்
எத்தனை வலிய கொம்பமார்க்கும்
இவமாரு பணிஞ் சிட்டில்லா

பூசை, புனஸ்காரம், 
சாஸ்திரம், சம்பிரதாயம்,
மந்திரம், மாந்திரீகம் ஒக்க
படிக்கானும் படிப்பிக்கானும் 
இவமாரு திறக்காரனாணும்

இவமாரு ஆத்தியமாயிட்டு செஞ்ச தெற்று
சோழ நாட்டு ஆச்சாரிமாரை இவிடே 
திருச்செந்தூர் கோவிலுக்கு வருபிச்சி 
அவமாருக்கு அதிகாரம் ஒக்க விட்டு கொடுத்து 
பட்டம் கிட்டம் மாத்திரம் இவமாருக்கு கிட்டியது. 
பட்சே….. சமுத்திர வருமானம் ஒக்க 
கோவிலுக்கு கொடுத்து ஆனா அவமாரு
நிங்களைபோல ஆச்சாரிமார் 
இபரவமாருக்கு மறுபடியாயிட்டு
செஞ்சது எந்தானுன்னு அறியுமோ!

ஆச்சாரிமார் பரவமார் கோவிலே 
பரவமார் சம்பாத்தியத்திலே சுகிச்சிட்டே 
நாயக்க அரசமார்கிட்டே
நுணைபறைஞ்சி பரவமார்க்கு அவமார்க்கு
பிரஷ்னை உண்டாக்கி
சாய்பு மாரும் கூடிகளிச்சு 
அவமாரு கடலை தெத்தி எடுத்து 
கலவரங்களாயிட்டு போனபோழ்
பரவமாரு அச்சமாரை தேடிபோய் 
மதம்மாறான் காரணமாயி

ஆத்திய காலம் தொட்டு கங்கமார் 
பாண்டிமாரோட தளபதி 
நம்மளட காலத்திலும் அவமார் தளபதி தன்னே 
பாரவமார் ஒக்க அம்மச்சாவை நிந்திச்சாலும் 
கங்கமார் இன்னும் மாறி ட்டில்லா 
வலியச்சன் சேவியரையும் நமக்கு பரிச்சயப்படுத்தி 
வலியச்சனை கொண்டு நாயக்கமாரை 
கோட் டியாத்து கரையில
பேடிபிச்சி ஓடான் செய்பிச்ச கொம்பனானும்
இ கங்கமார்

ஆதிவசம் வலியச்சன் சேவியர் 
நம்மள இரட்சித்திலேங்கில் 
கேரளத்து தரவாடு ஒக்க
நாயக்கமாரு நசிச்சு ஒழிப்பிச்சிருக்கும் 
பட்சே
கங்கமார்க்கு நம்மளோடு தேச்சியமானும்
மங்கல துறை கொட்டார கலவரத்தின்டே
விசேஷம் அவமாரு நம்மோடு பிணங்கி போயி

இப்போழும் பரவமார் கங்கமார் 
இவிடே உண்டேங்கில் 
கொச்சு ஆச்சாரி நீங்களுக்கு
இவிடே பணியில்லா….மனசிலாயோ!
சொல்பம் மிண்டாதிறுக்கணும் கேட்டோ...

என படபவென தன் மனதில் உள்ளதை பொழிந்து தள்ளினார் கேரள அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள் மேலும் ஏதேதோ யோசித்தவாறு தனக்குத்தானே மெதுவாக பேசிக் கொண்டார்.

ஒவ்வொரு கொல்லமும் சித்திரை விசு விசேஷம் தொட்டு கங்கமார் அரசமனைக்கு வரும். ஈ கொல்லமும் என்னை வந்து கண்டுட்டுண்டு. 

அம்மச்சா அம்பல பிரஷணம் களையான் தாத்பரியம் 
கங்கன்மார் மாத்ரமே அறியும் 
அவமாரை விழிப்பிச்சி சோத்திச்சாலோ
என எண்ணி முடிப்பதற்க்குள் 
தளவாய் என சப்தமிட 
நின்று கொண்டிருந்த தளபதி விரைந்து 
அரசருக்கு அருகே வந்து நின்றார்

தளவாய்…. ஆ.. கங்கமார் தரவாடு 
இவிடருந்து தொட்டடுத்த குமரி முட்டமானும் 
அவமாரை மாகராசா விளிக்கின்னு 
பரைஞ்சி மரியாதயாயிட்டு 
சாரட் வண்டியில விழிச்சிட்டு வா
உரைபாயிட்டு வரும் என நம்பிக்கையோடு 
தன் தளபதியை அனுப்பி வைத்தார்.

மாலை கருக்கலில் கொட்டாரத்து அரண்மனை பரப்பரப்புக்குள்ளானது. அரண்மனையின் பூட்டிய கதவுகளுக்குள் கங்கனார் குல வாரிசு ஒருவர் மாகாராசவுடன் ஓசைபட நடத்திய விவாதம் கதவு இடுக்கு வழி வெளியே முனகலாய் வெளிபடர்ந்தது.

நீண்டபொழுது கடந்து கதவு திறந்து அரசரே வாயில் வரை வந்து வழியனுப்பிய போதுதான்  கொட்டாரத்து சிப்பந்திகளும் அதிகாரிகளும் அங்கு பணிபுரிந்த யுவதிகளும் கண்டனர். 25 வயது இளைஞன் ஒருவன் சூரிய ஒளி போல் மேனி தகதகக்க பூணூல் கொடி படபடக்க மடுதா பாச்சின வேட்டியும் துண்டுமாய் பவித்திர புருசனாய் நடந்து வந்தான். அவன் தான் கங்கன் குல வாரிசான இளம் பரதவ வர்மன்.

மகராசனுடன் உரையாடியது இக்கட்டான சமஸ்தானத்து நெருக்கடி காலத்தில் கங்கன் வம்சாவளியை மகராசா நினைவிற் கொண்டதை எண்ணி புளங்காகிதத்தோடு மகராசாவின் சாரட் வண்டியில் தன் தரவாடு நோக்கி திரும்பினாலும் பரதவர்மனின் எண்ணம் முற்றிலும் அலைபாய்ந்து கொண்டே இருந்தது, பாரம்பரிய ராஜவிசுவாசம் பதட்டப்பட வைத்தது.

சமஸ்தானம் அளித்த பணியை நினைத்த பரதவர்மனுக்கு சிறிது நெருடலாய் இருந்தது. பரதவரின் அண்மை தேடும் அம்மச்சாவின் ஏக்கம் ஏதோ இனம்புரியாத பாரத்தை தந்தது. தன் பரதவ இன சொந்தங்கள் பிரிவுபட்டு கிடப்பதால் அம்மச்சாவின் தேர்வடத்தை தொட்டு இழுக்க, எவரை அணுக எதை சொல்லி அணுக என புரியாது குழம்பி தவித்தபோது, மின்னலாய் இடியாய் மழையாய், பரதவர்மனின் நினைவினில் பொழிந்த உருவம் சாமிப்பிள்ளை…. உவரி சாமிப்பிள்ளை.

சடைமுடி நாதர், அடுத்த நொடி நடப்பதையும், தன் நாடி வழி உணரக்கூடிய சித்தர் ஆறுபடை முருக பெருமானின் பித்தர் பரதவர்மனின் வசிஷ்டன் 12 வருடங்களாக பரதவர்மன் சாமிபிள்ளையின் சீடனாக அவரோடு குருகுல வாழ்க்கை வாழ்ந்து வந்தவன் அதனாலே தான் பரத குலத்து மாமுனி சாமிபிள்ளையை தவிர எவரையும் நினைக்கவும் அழைக்கவும் பரதவர்மனுக்கு முடியவில்லை. ஆனாலும்

பரதவர்மனுக்கு சாமி பிள்ளையை உடனே காண்பதெப்படி தலை கிறுகிறுத்தது. பரதவ மாமுனி சாமிப்பிள்ளை அறுபடை வீட்டில் எந்த வீட்டில் 
தியானித்து இருக்கிறாரோ…? இல்லை உவரியிலே ஓய்வெடுக்கிறாரோ…!குழம்பியபடி, புலம்பியபடி, பரதவ வர்மன் பயணிக்க…

கங்கனாரின் முட்டத்து ஈரடுக்கு மட்டுப்பா வீட்டிலிருந்து கூப்பிடும் தூரத்திலிருந்த வெள்ளியல் பாறையில் ஒற்றைக்காலில் நின்று தாய் கடல் நோக்கி தியானித்துக் கொண்டிருந்தார் சாமிப்பிள்ளை. முற்றும் அறிந்த மாமுனியை விதி குமரிக்கு அழைத்து வந்ததில் வியப்பேயில்லை.

ஆனால் அவரே விளையாட குமரிகரைக்கு விரைந்தாரோ….? அவ்விதம் எண்ணுவதிலும் தப்பில்லை ஆக திருவிளையாடல் ஆரம்பம்...
அதையும் தான் பார்ப்போம்….?

…….. கடல் புரத்தான் ……..

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.