Our Blog

விடிந்தகரை 2.02


கங்கன் என்கின்ற சமஸ்தானத்து அதிகாரி பரதவ மீனவ குலத்தவன்

பரதவர்களும், பரதகுலத்து ஆச்சாரியார்களும் முத்து குளித்தல் உரிமை தொடர்பாக நாயக்க, வடுக மூர்களின் பரதவ இன அழித்தலுக்கு எதிராக 1537 ல் தொல் பாண்டி நெய்தல் நிலத்து பரதவ பாண்டிமார் குலத்து தலைவனாம் விக்ரமாதித்ய பாண்டியன் ஆணைகேற்ப , ஒட்டு மொத்த பரத சமூகமும் கூடி ஆலோசித்து தன் தாய் மதம் விடுத்து தன் பல்லூழி கால பரதவ பாண்டிய இனத்தை காத்துக் கொள்ள போர்த்துகீசியரை நாடி கிறித்துவ மதம் தழுவியது, அதன் பின்னர்

குமரி பரதவர்கள் 1544 ல் சவேரியார் காலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசர் உதய மார்த்தாண்ட வர்மா (1537 -1549) ஆட்சியின் போது நாயக்க வடுகர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி சிதறடிக்க பட்டு  திருவனை பாறையில் அடைக்கலாமாகி உயிர் பிழைத்த போதும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசர் கேரள வர்மா (1550 – 1553) ஆட்சி காலத்தில் நம்பூதிரிகளால் உருவான 1552 ராசாக்க மங்கல கலவரத்தின் போதும் தன் மக்களை காப்பாற்றாத திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மீது சொல்லவொண்ணா வெறுப்பில் குமரி பரதவர் இருந்தார்கள்.

இவ்வாறு தன் வாழ்வோடு இனைந்திருந்த குமரி அம்மச்சாவை விட்டுவிட்டு அம்மைக்கு செய்கின்ற ஆச்சார சடங்குகளை துறந்துவிட்டு குமரி பாண்டி பரதவர்களும், குமரி அம்மச்சாவின் பரத குல ஆச்சாரியர்களும் தூரமாகிபோன நாட்களிலிருந்து குமரி அம்மச்சாவின் தெப்பத்தேர்விழா தடைப்பட்டுபோனது. குமரி கண்டத்து காலம் தொடர்ந்து ஆதி தமிழ் குடி பரதவ பாண்டியரின் ஆச்சார சடங்குகள் அனைத்துமே கடலை……. கடல் நீரை முன்னிலை படுத்தியே தொடர்ந்து வந்திருக்கிறது.

முந்நீர் விழா, நாவாய்த் திருவிழா, இந்திர விழா, கடலாடு தெப்பத் திருவிழா என கொண்டாடப்பட்டு மறைந்து போனாலும் அதன் எச்சமே இன்று வரை பரத கண்டம் எங்கும் சாத்திர, சமய, சம்பிரதாய சடங்குகளில் சங்கு, வலம்புரி, மச்சம், தீர்தம், ஆராட்டு,தெப்பம் என எச்சமாய் வியாபித்திருக்கிறது.

கடல் அம்மையை வருடத்திற்கு ஒருமுறை கடலுக்குள் அழைத்து திரு உலா நடத்துவதன் மூலம் கடல் அம்மை தனது கடலை சாந்தபடுத்தி முத்து, மீன், மற்ற கடல்வளத்தை உருவாக்கி பாண்டியர்களின் வாழ்வை மேம்படுத்துவாள் என்பது புராதன நம்பிக்கை.

கொற்கை கடலை விட்டு மதுரை போன பாண்டி இனம் அம்மச்சாவிற்கு புது பெயராக மீனாட்சியை உருவாக்கி நீராட பொற்தாமரை குளத்தையும் உருவாக்கியது கலச்சார தொடர்பாகவே எண்ணப்படுகிறது. தொல் பாண்டி பரதவரின் நவீன கொற்கை முத்து நகரினிலே பரதவதாயின் தேர் உலா பவனியின் போது இப்போதும் துறைமுக வாயிலில் பாடப்படும் பாமாலையும் பாரம்பரிய எச்சமே.

ஆனாலும் ஆயிர்மாண்டு பரதவரின் கட்டுப்பாட்டிலிருந்த அம்மச்சா கோவில்
குமரியில் பரதவர்கள் தாய் மதம் துறந்து அம்மச்சாவை மறந்து போனதாலே குமரி அம்மச்சாவின் தெப்பத்தேர்விழா தடைப்பட்டுபோனது. கி பி 1600 தெப்பத்திருவிழாவின் போது தெப்பக்குளங்கள் இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. (திருவிதாங்கூர் அரசரால் பின்னர் குமரியில் 4 தெப்பகுளங்கள் 1600க்கு பிறகே உருவாக்கப்பட்டது.)

1544 க்கு பிறகே பரதவ பாண்டியர்கள் இல்லாத நிலையில் குமரி ஆழி பேரலை யை தாண்டி அம்மையை திருவணைப்பாறைக்கு எடுத்துச்செல்ல முடியாத நிலமையில் ஆச்சார சடங்குகள் அழியும் நிலை உருவானது. முந்நீராட்டுக்கு பரதவ பாண்டியர்களால் கிழக்கு வாசல் கடந்து .....  தீர்த்தம் கண்ட பரதவர்களின் அம்மச்சா தெய்வத்தின் சடங்குகள் தடைபட்டு போகின அதனாலே நீண்ட நாட்களாக கிழக்கு வாசலும் மூடப்பட்டுபோனது.

இந்நிலையில் தான் திருவிதாங்கூர் சமஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. "இந்த வருடம் தமிழ் வருடம் 777 விஜய வருடம் வைகாசி மாதம் 1602 குமரி அம்மச்சா தெப்பத்தேர் திருவிழாக்கு அனைவரும் வந்து கலந்துகொள்ள வேண்டும் முக்கியமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வாழும் பரதவர்கள் அனைவரும் வந்து சேரவேண்டும் " என்பது அரசாங்க கட்டளையாக பிரகடன படுத்தப்பட்டது. (இன்றைய பெரிய தாழை வரைக்கும் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு கட்டுபட்டதாக இருந்தது.)

ஆனால் பரதவ பாண்டியர்கள் போர்ச்சுகீசியரின் பின்பலத்தோடு தாம் மீட்டெடுத்த கடல் வளச் செல்வத்தோடு கிடைக்கப் பெற்ற அதிகார உடைமையின் காரணமாக திருவிதாங்கூர் சமஸ்தானத்து குமரி அம்மச்சா கோவில் தெப்பத் தேர்விழாவிற்க்கு சமஸ்தானத்து ஆணையை ஏற்று ஒத்துழைக்க குமரி பரதவர்கள் மறுத்து விட்டனர். இதனாலே அவமானப்பட்ட சமஸ்தானம் குமரி பரதவர்களையும் ஆச்சாரியார்களையும் குமரி கடலோரத்திலிருந்து விரட்டியடிக்க ஆயுத்தமானது

குமரி பரதவர் மீன் வேட்டைக்கு சென்ற பின்னர் தனித்திருக்கும் பரத்தியர் சிறார் மீது திருவிதாங்கூர் சமஸ்தானத்து படைகள் மூலம் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. அவர்களது அராஜகத்தை தாங்கமுடியாத குமரி பரதவர்கள் காலகாலமாக பரதவரோடு பயணிக்கும் பாண்டி மறவ குலத்து பங்காளிகள் துணையை நாடினர்.

வள்ளியூர் பாண்டிய மறவர்களை அழைத்து வந்து தனித்திருக்கும் பரத்தியர்களுக்கு பாதுகாவலாக குமரி பரதவர்களின் முருக கோவிலுக்கு அருகே குடியமர்த்தி சமஸ்தானத்தை எதிர்க்க துணிந்தனர். திருவிதாங்கூர் சமஸ்தானத்து ஒட்டு மொத்த பரத சமூகமும் மத ரீதியாக புதுவழி கொண்டதோடு அரசியல் ரீதியாக சமஸ்தானத்துக்கு கட்டுபட மறுப்பது சமஸ்தானதிற்கு விடுக்கபட்ட அறைகூவலாகாவே எண்ணப்பட்டது.

ஆனால் சமஸ்தானமோ!!

முந்தைய காலத்திலிருந்தே……குமரி பரதவர்களை தங்களது ராஜ குலத்து விசுவாசிகளாகவும். தங்களது அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுத்த கூடிய தளபதிகளாகவும் எண்ணி அவர்களுக்கு உயர் சலுகைகளை வழங்கியிருந்தது.

குமரித்துறை என்கின்ற சின்னமுட்டம் கிருத்துவின் சீடன் தோமையார் காலத்து பதிவுகளிலே இடம் பெற்ற தொல் பாண்டி பரதவ இயற்கை துறைமுகம் அங்கே கங்கன் என்கின்ற சமஸ்தானத்து அதிகாரி பரதவ மீனவ குலத்தவன் பெரும் ஆளுமையுடன் கடல் திரை மற்றும் துறைமுக சுங்க வரிகளை வசூலித்து கேரள அரசின் கருவூலத்தை கொட்டி நிரப்பியவன்.

தனது சமஸ்தானத்து நெருங்கிய தொடர்பின் காரணமாக அவர்தாமே குமரி பரதவரின் வேண்டுகோளை முன்மொழிந்து இடங்கை வலங்கை எனும் கேரள அரசு சட்ட திட்டங்களுக்கு மாறுதலாக கடல் திரை வருமானம் கொட்டி கொடுக்கும் பரதவர்களுக்கு பொருந்தாது என 1526லேயே திருவிதாங்கூர் அரசர் உதய மார்த்தாண்ட வர்மா காலத்திலேயே குமரி பரதவர்களுக்கு முழு 
வரி விலக்கையும் வாங்கி கொடுத்தார். மேலும்

அவர்தான் 1537ல் பரதவ தலைவர் விக்ரமாதித்தய பாண்டியரையும் டாம் குருஸ் எனும் குதிரை வணிகரையும் குமரித்துறையிலே சந்திக்க வைத்து பரதவ சமுகமே புது முடிவெடுத்து கிருத்துவ மதம் மாற பின்புலமாகவும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. களரி, மற்றும் இசைக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலைகளில் தேர்ச்சியும் முதிர்சியும் பெற்ற தளபதி கங்கனாரின் வாரிசுகள் கேரள சமஸ்தானத்திலும் பாண்டிய, சோழ அரசவையிலும் கோலோச்சி வந்தனர். கேரள சமஸ்தானத்து வர்மா பெயரை தாங்கி இன்றும் வாழும் பரதகுலத்து வர்மா குடும்பத்தினர் அவர் தாமோ என எண்ண தோன்றுகிறது.

வேதாளையில் பட்டி மரைக்காயர், குஞ்சாலி மரைக்காயர் அலி அப்ரஹாம் போன்ற பரத குலத்து எதிரிகளை அழித்தொழித்த பரத இனம். 

புன்னயை சிறை படுத்திய இரப்பாளியை கூர்கூராக பிரித்து மேய்ந்து நாயக்கரை விரட்டி நாயகனாக உயர்ந்த ஓர் குலம். 

அசூர வேகத்துடனும், விவேகத்துடனும், ஆட்சி அதிகாரம் தன் ஆளுமை என்கின்ற கர்வத்துடனும் புயல் வேகத்தோடு முன்னேறிக்கொண்டிருந்தது.

அதே வேளையில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து ஒட்டு மொத்த பரத சமூகமும் மத ரீதியாக புதுவழி கொண்டதோடு, அரசியல் ரீதியாக சமஸ்தானத்துக்கு கட்டுபட மறுப்பது சமஸ்தானதிற்கு விடுக்கபட்ட அறைகூவலாகாவே எண்ணப்பட்டது. ஆனாலும் சமஸ்தானத்து அறிவிப்பின் படி தடைபட்ட அம்மச்சா தெப்பத் தேர் திருவிழாவை நடத்தி முடிக்க இம்முறை அம்மனை தெப்பத்தில் ஏற்றி திருவாணைக்கு கொண்டுசென்று சாஸ்திர சம்பிரதாயம் நடத்த சமஸ்தானம் மாபெரும் திட்டம் தீட்டியது.

அவ்வாறே பரத குலத்து அம்மச்சா கோவில் ஆச்சாரியார்கள் கோவிலை சுற்றி வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் திருவிதாங்கூர் சமஸ்தானத்து புத்தம்புது பிராமணர்களை குடியேற்றி அம்மச்சா கோவில் நிர்வாகத்தை கையளித்தது. 

மேலும் கடல் அம்மை அம்மச்சாவிற்கான சாஸ்திர சம்பிரதாய சடங்குகளை செய்ய பாண்டி பரதவ மீனவர்களுக்கு பதிலாக திருவிதாங்கூர் சமஸ்தானத்து மீனவ குலத்தை சார்ந்த மேற்குகடற்கரை முக்குவ மீனவர்களை கொண்டுவந்து கொடியேற்றி கட்டுமரத்து தெப்பத்தை உருவாக்கி திருவணைபாறை சடங்குகளை முழுமையாக செய்து முடிக்க திட்டமிட்டு அதன்படியே விமர்சணையாக விழாவை கொண்டாட துவங்கினர்.

இதற்க்காகவே திருவிதாங்கூர் சமஸ்தானத்து அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள் ஓரிரு மாதங்களாக கொட்டாரத்து அரண்மனையில் தன் சொந்தங்களோடும், பரிவாரங்களோடும் தங்கியிருந்தார்.

அன்றைய 10வது தேர்திருவிழாவின் போது குமரியை சுற்றி இருக்கின்ற அனைத்து சமூக மக்களும் வந்து தேரை இழுத்து தேர்திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். ஆனாலும் அந்த தேர்..........ரதவீதியை சுற்றி வரும் போது பாரம்பரிய பாண்டி பரதவர்களின் வழிபாட்டுடை தெய்வம் முத்தாரம்மன் சன்னதியில் அது அசையாது நின்று போனது.

நான்கு நாட்களாக ஊர் ஊரூராக மக்கள் திரண்டு வந்து வடம் இழுத்தாலும் அந்த தேரை இழுக்க முடியவில்லை. முத்தாரம்மன் கோவில் சன்னதியில் அத்தேர் புதையுண்டு போன காரணத்திற்காக பிராமணர்களும், நம்பூதிரிகளும் பலரும் பல ஆருடங்களை பார்த்து இறுதியில் இந்த ஆத்தாவின் பிள்ளைகள் குமரி பரதவர்கள் கை தொட்டால் தான் இந்த தேர் தன் நிலை திரும்பும் என்பதனை பரிகார நிவர்த்தியென அரசருக்கு பரிந்துரைத்தார்கள் தெய்வ குற்றமோ என எண்ணிய அரசன் மீண்டும் இந்த குமரி பரதவ சமூகத்தை நாடினார்.

குமரித்துறையில் இருந்த பரதகுலத்து ஆச்சாரிமாரை, பட்டங்கட்டிமாரை, வில்லவராயரை அணுகிய போதும் அவர்கள் இதற்கு செவி சாய்க்க மறுத்துவிட்டார்கள்.

இக்கட்டான இச் சூழலில் தன் தாத்தா உதய மார்த்தாண்ட வர்மா காலத்து சமஸ்தானத்து ராஜ குலத்து விசுவாசி பரதவ மீனவ குலத்தவன் கங்கன் என்கின்ற ஆளுமை மிக்க சான்றோனை அந்த நேரத்திலே நினைவுபடுத்தி தேடினான் திருவிதாங்கூர் அரசர் வீர ரவி வர்ம குலசேகர பெருமாள்.

அது எப்படி……….?
கங்கன் என்ன …….கொம்பனா..?
பார்ப்போம்

……………கடல் புரத்தான்…………….

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.