Our Blog

விடிந்தகரை 2.01


தொல் பாண்டி பரதவரின் அம்மச்சா (அம்மை + மச்சம்)

தொல் பாண்டி பரதவரின் அம்மச்சா (அம்மை + மச்சம்) என்கின்ற ஆதிபொருட் பெயர் தாங்கிய குமரி கண்டத்து கடல் தெய்வம் மீனாட்சியெனும் பாண்டிய வம்சத்து குலதெய்வத்தின் முதற்..பரிணாமம்

ஆழி பேரலையால் குமரி கண்டம் அழிந்து கரை பிழைத்த பரதவ பாண்டியர்கள், அக்கரைக்கு குமரி என பெயர் பொறித்தனர். அன்றே அங்கே தன் கடல் அம்மையை சாந்தம் கொள்ள செய்ய வழிபாடு தலம் அமைத்து மன்றாடினர். அவ்விடமே யுகங்கள் பல கடந்து இன்று வரை நிலைத்து நிற்க்கும் முக்கடல் சந்நதியில் அமைந்திருக்கும் அம்மச்சா எனும் குமரி அம்மன் கோயில். அக்கோயிலை சீரமைத்து உருவாக்கியதாக இன்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்து வரலாற்று ஏடுகளில் வில்லவராயன் எனும் பரதவ சிற்றரசனையே குறிக்கிறது.

பிற்காலத்தில் சேர நாட்டு மலையாள கதைகள் புனையப்பட்டு பரதவரின் கடல் தெய்வம் பகவதி அம்மனாக போனதாக பல பாரம்பரிய வாய்பாடும் உண்டு. சவேரியார் இங்கு வந்து பரதவர்களை கிருத்துவ விசுவாசத்தில் திடப்படுத்தும் பணிகளில் ஈடுப்பட்ட பொழுது திருவனை பாறை கரையோரம் கோயிலை சுற்றி பரதவர்கள் வாழ்ந்து வந்தனர்.

அதே நேரத்தில், பரதவரின் அம்மச்சா கோயில் நிர்வாகத்தை கையிலெடுத்து அதை ஆண்டுகொண்டிருந்தது ஆச்சாரியார் என்கின்ற பரதவ குலத்து வேதியர் கூட்டம். சவேரியாரின் கட்டளைக்கு கீழ் படாமல் அதுவரைக்கும் மதமும் மாறாமல் மறுதலித்து வாழ்ந்து வந்தது.

இந்நிலையில் 1544 ஆம் ஆண்டு நடைபெற்ற வடுகர்களின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு  குமரி பரதவர்கள் திருவனை பாறையில் தஞ்சம் புகுந்த நேரத்திலே பரத குலத்து ஆச்சாரியார்கள் கையறு நிலையிலே கலங்கி போய் அம்மச்சா கோயிலுக்குள் அடைப்பட்டு கிடந்தனர். பின்னர் சாதி தலைவனாரின் பரத படையோடு வந்த சவேரியார் வடுகர்களை ஒடுக்கி விரட்டி பரதவர்களை மீட்டெடுத்து புன்னைக்கு அழைத்து போய் ஆசுவாசப்படுத்தினார்.

அதன்பின்னர் தான் தனது அம்மச்ச என்கின்ற கடல் தெய்வத்தை விட்டு விட்டு தூரமாக வடக்கிலே கடல்புரத்தில் சின்னஞ்சிறு ஆலயத்தை கட்டி வலுக்கட்டாயமாக பரதவர்களை இடம் பெயர செய்தார் சவேரியார். இந்த ஆச்சாரியார் கூட்டம் முதல் முதலில் சவேரியாரின் கட்டளை ஏற்றுக்கொள்ளவில்லை தான் ஆனாலும் வடுகர்களின் அந்த பாதிப்பு, தன்னுடைய இரத்த சொந்தங்களை வடுகர்கள் மதத்தின் பேரால் சிதைக்கும் போது அந்த ஆச்சாரியார்கள் கூட்டமும் மனமுடைந்து போய் இந்தக் கூட்டத்தோடு கலந்து போய்விட்டது.

பின்னாளில் ஆச்சாரியார்கள் ஆராச்சியார் என்கின்ற திரிபாக மாறிப் போனதாக ஆராச்சியார் வம்சத்து கதைகள் சொல்லுகிறது. இது போலவே அங்கொன்றும் இங்கொன்றுமாக தனது பாரம்பரிய மதத்தை இழக்க விரும்பாத பல பேர் அன்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

இப்படியாக தான் தமிழ் வருடம் 777 விஜய வருடம் வைகாசி மாதம் 1602 பரதவரின் அம்மச்சா தெப்பத் தேர் திருவிழா

பல்லூழி காலமாக பரதவர்கள் வந்து கொடியை ஏற்றி, ஆட்டமும், பாட்டமுமாகக் கொண்டாடுகின்ற அந்த தெப்பத் தேர் திருவிழா பத்து பதினைந்து வருடங்களாக கோலாகலமிழந்து காணப்படுகிறது.

காரணம் அந்த தெப்பத் தேர் திருவிழாவிலே தனது அம்மச்சாவை கட்டு மரத்திலேற்றி திருவணை பாறைக்கு கொண்டு சென்று கடல் தீர்த்தமாடி வெகு விமரிசையாக நடத்துகின்ற பரதவர்கள்.

மதம் மாறி தனித்தனியே ஒதுங்கிப் போனதுமேயல்லாமல் கடைசியாக இருந்த ஆச்சாரியர்கள் குடும்பமும் தன்னை மாற்றிக் கொண்டது என்பதை 
அறிந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஓர் அறிவிப்பு அறிவிக்கப்படுகிறது.

இந்த வருடம் குமரி அம்மச்சா தெப்பத் தேர் திருவிழாக்கு திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள எல்லோரும் வந்து சேரவேண்டும் என்பதாகும்.

எல்லோரும் வந்தார்களா....?
நம் அம்மை திருவணைக்கு போய் நீராடினாளா...?

பார்ப்போம்.......!

.......கடல் புரத்தான்.........

NOTE (2) (After their conversion, for about six years, till the arrival of Xavier, the Paravas remained without any religious instruction. During those years they were left free to carry on their religious practices. Only with the arrival of the Portuguese missionaries from 1545 they were given Christian faith formation. Xavier, who had patronised this community, did not attempt to acquire any systematic grasp of the Hindu theology)

NOTE (2)Letters of Xavier, June 16, 1544, p. 84
My dearest Brother in Jesus Christ, 
On Tuesday last I came back to Munahpaud, and God our Lord knows what I have gone through in my voyage. I had set off with twenty tones to comfort the Christians whom the Badages have driven into flight, who, as I was told, were dying miserably of hunger and thirst amongst the rocks which bound the shores of Cape Comorin ; 
but I met with strong winds from the opposite quarter, and neither by rowing nor by towing could we make head against the sea, and I was not able once to get a single vessel to the Cape. If these winds fall, I shall go there again to take what relief I can to these poor creatures in their extreme distress ; for a man must be harder than iron if he could give up making all efforts in his power to relieve the miserable case of these people, who are our brethren in the worship of Christ a case I really think the most calamitous that can be found anywhere. Many of the fugitives arrive every day at Munahpaud without clothing, nearly dead with hunger, and destitute of everything. I am writing to the Patangatins of Combutur, of Punical, and of Tuticorin, to collect for them some little alms, and get them sent to us : but bidding them, however, to exact nothing from the poor, but simply to ask the captains of vessels, and others who have some means, of their own free will to contribute to so pious a work.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.