Our Blog

எகிப்தில் கோலோச்சிய தமிழ் பரதவர் - 2

கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் எகிப்தில் வாழ்ந்தனர். “Comparison of Badalian and primitive Indian Races" என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டியெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

நீல நதி என அழைக்கப்பட்டு பின்னர் பெயர் திரிந்ததே இன்றைய நைல் நதியாகும். தமிழர்கள் நீல நதி என்று அழைத்ததை அப்படியே NILO (நீலோ) என இத்தாலியிலும், அதை NILE (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. எனவே நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். இதனை ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்ற கருத்துடன் உறுதிபடுத்துகிறார்.

Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார். சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....

Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.

Asiatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.

"Heinrich Kari Brugsh" - "History of Egypt" என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.

இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்.

“எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார். Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l"Inde)

LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர் “எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர்” என்கிறார்.

எகிப்து நாகரிகத்தின் முதல் ஐந்து ஆள்குடி (dynasty) மன்னர்களின் பிள்ளைப்பருவப் பெயர்கள் அத்தனையும் தமிழே. எகிப்து நாகரிகத்தை தமிழரே தோற்றுவித்ததாக விவேகானந்தர் கூறியுள்ளார்.

சிங்க உடலும் மனிதத் தலையும் உடைய வடிவம் பெருமிடுகளிலும் தமிழகக் கோயில்களிலும் காணப்படுகின்றன. திருவாதவூரில் தனிச் சிற்பமே வழிபாட்டில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

கி.மு.4000 ஆம் வரையில் எகிப்து-பண்டு இடையே நோவா காலம் தொடர்ந்தும் (கி.மு.2400) கப்பற் பயணங்கள் நடந்திருப்பதை பொறிக்கப்பட்டிருக்கும் எகிப்தியச் சின்னங்கள் தெரிவிக்கின்றன. எகிப்திலிருந்து நோவா என்பவர் கட்டிய கப்பல் கூட பண்டு (பாண்டியர்) நாட்டிற்காகச் செய்தவையாகும். இவை பற்றிய விபரங்களை முதலில் பட எழுத்துகளிலிருந்து மொழி பெயர்த்து ஹென்றிபுரோசு என்பவர் வெளியிட்டார். குமரித் தமிழர்கள் நிலப்பகுதிகள் கடலில் மூழ்க பல இடங்களுக்குக் குடிபெயர்ந்தனர்.

சுமேரியர்களை முன்னோடிகளாகக் கொண்டு மத்தியத் தரைக்கடல் கிழக்குப் பகுதியில் பனைமரங்களடர்ந்த இடங்களில் கோட்டை, கொத்தளம் அமைத்துப் பெரும் வணிகர்களாக வாழ்ந்த கடலாடிப் பகற்பரதவத் தமிழர் வழியினரே பொனீசியர். அவர் வழி வந்தவர்களே பிரிட்டானியர்.

...............(தொடரும்).............

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.