Our Blog

இரத்த பூமி - 16இடது கையில் திருக்கை வாலும், வலது கையில் வேளா கொம்புமாக‌ பரதவ பாரம்பரிய ஆயுதத்தை தூக்கி சுழற்றியவாறே பகைவரின் கதை முடிக்க பாய்ந்தார் பரதவ தலைவன் வீரபாண்டியனார்
……………………………………..


ஆக்ரோஷமாய் பாய்ந்து வரும் மூர்படையை இன்னும் இன்னும் முன்னேறும்படி பரதவர் படை தெற்காலே பின்வாங்கி சென்று பெரும் மணல்மேட்டிலே நிலைபெற்று நின்றது. எதிர்த்து வரும் காலனின் படைக்கு தன்னை காவு கொடுக்கவும், எதிராளியாய் வரும் காலனின் படையை காவு எடுக்கவும் பரதவர் படை துணிவாய் நின்றது.

தன் இடத்துக்குள் அத்துமீறி நுழைந்து தன் இனத்தை அடிமைபடுத்திய இரப்பாளி என்கின்ற ஈனபிறவியை தெரியாத பரதவ பட்டங்கட்டிமார் ஒவ்வொருவரும் தானே இரப்பாளியை வஞ்சம் தீர்க்க வேண்டும், என்கின்ற வெறியோடு போர்களத்தில் புகுந்தாடி பகைவரை பந்தாடிட தினவெடுத்து காத்திருந்தனர்.

" அல்லாஹூ அக்பர் " என்கின்ற இனிமையான அல்லாவின் பெயரை கொலைவெறியோடு உச்சரித்த கொள்ளையர் படை பரதவர்களை கொன்று குவிக்க கடற்கரை மணலின் மேல் புழுதி கிளம்ப வடக்கே இருந்து தெற்கு நோக்கிஆரவாரித்து பாய்ச்சலாய் வந்தது. இதற்கு முன்னர் போர்துகீசிய கப்பற்படை தரை தட்டி நின்றதுமே வெறி பிடித்தது போல புரஞ்சேரனும், ஐயனாரும் தாவி குதித்து தரையில் விழுந்து ஓடிய போதும்.....

போர்துக்கீசீயரை நாடாமல் மேவாமல் படு கன பீரங்கிகளை ஏதோ மடி பொட்டி போல் தூக்கிக் கொண்டு கரைக்கு தாவி பாண்டியம் பதியின் பரதவரும் பட்டங்கட்டிகளும் வடக்கே இரப்பாளியின் படையை தாக்க முன்னேறி ஓடியதையும் இன்னும் கப்பலிலேயே இருந்து பார்த்து கொண்டிருந்த போர்துகீசிய வீரர்களுக்கும் கேப்டன் லோரன் கோயன்கோ விற்கும் என்ன நடக்கிறது என்பது தெரியாமல்  அதிர்சியில் இருந்தனர். பரதவரை பைத்தியக்காரராய் எண்ணிக் கொண்டனர்.

இப்போது பரதவ படை பின்வாங்கி மேட்டு பகுதிற்கு செல்லும்போது குழம்பிய கேப்டன். வடக்கே தூரத்திலிருந்து கொள்ளையர்படை தெற்காலே உள்ள பரதவர்களை தாக்க வரும் போது தரை தட்டிய கப்பலை கடந்து போகும் தருணத்தில் கொள்ளையர்படையை தாக்கத்தான் பரதவ படை தெற்கே நோக்கி நகர்ந்துள்ளது என கண நேரத்தில் புரிந்து கொண்டார்.

உடனடியாக கப்பலில் மீதமிருந்த பீரங்கிகளை அணியத்திற்க்கு மாற்றி வடக்கு மேற்கு தெற்க்காலே வரிசைபடுத்தவும் தாக்குதலுக்கு தயாராக பதுக்கி இருக்கவும் ஆணையிட்டார். கொள்ளையர் படை தெற்க்கு நோக்கி பாய்ந்து வர அப்போது வடக்காலே தூரத்தில் முழங்கிய சங்கு சத்தம் அனைவரையும் அதிர்சியில் ஆழ்த்தியது.

பெரும் ஆரவாரத்துடன் புரஞ்சேரனாரும் ஐயனாரும் குதிரையில் உடன்வர‌ புதுப்பட்டிணத்தின் மறவர் தலைவர் தன் பெரும்படையோடு பாண்டியர் மறவர் என்ற ஓங்கார‌ முழக்கத்தோடு மேற்கே இருந்து கிழக்காக கடற்கரைக்குள் நுழைந்தனர்.

மேடான‌ பெரும் மணற்பரப்பில் பரதவ படையோடு உச்சியில் நின்ற பரதவ தலைவர் வீரபாண்டியனார் முழங்கினார், "ஏ பாண்டியனே ஏ பரவனே..! இதோ வருகிறான் உன் பங்காளி பாண்டிய‌ மறவன். இடையிலே மாட்டிகொண்டான் எங்கிருந்தோ வந்த துலுக்கன் பாய்ந்து தாக்கு ,பகைவரை இல்லை என ஆக்கு ,காணுகின்ற யாவருமே இரப்பாளி தான் நமக்கு இன்றோடு முடித்துவிடுவோம் மூர்களின் கணக்கு" என முழக்கமிட்டவாறே வீரபாண்டியனார்

இடது கையில் திருக்கை வாலும், வலது கையில் வேளா கொம்புமாக‌, பரதவ பாரம்பரிய ஆயுதத்தை தூக்கி சுழற்றியவாறே தெற்க்கு மணற் பரப்பிலிருந்து எதிரிகளை நோக்கி பாய்ந்தோடினார். அவர் பின்னால் வெறிபிடித்த பரவ மறவர்கள் கடும் சினத்தோடு பாண்டியர் பரதவர் என்ற முழக்கத்தோடு காட்டாறாய் கிளம்பி ஓடினர்.

மூர்களின் படை அருகாமையில் வந்த போது தரை தட்டிய கப்பலிலிருந்து கிளம்பிய பீரங்கி குண்டுகள் கடற் மணல் பரப்பிலே விழுந்து எதிரிகளை கிலியாக்கிட நாலா புறமும் கொள்ளையரும் மூர்களும் சிதறி ஓடினர்.

மணல்மேட்டிலிருந்து கீழ் நோக்கி பாய்ந்து பரதவ படை கிளப்பிய புழுதியும் போர்துகீசிய கப்பலின் பீரங்கி குண்டுகள் கடல் மணற் பரப்பில் வெடித்து, கிளப்பிய புழுதியும், கொள்ளையரின் பின்னால் திரண்டு வந்த மறவர் படையின் தாக்குதல் புழுதியும் அந்த கடற்கரை எங்கும் சுற்றி சுழன்று மணல் திரையாகிப் போனது. 

நடப்பது என்னவென்று எவருக்கும் தெரியாத நிலையிலும் பாண்டியர் பரவர்!!!!......... பாண்டிய மறவர்!!!!....... எனும் வீரமிகு தமிழ் வார்த்தை மட்டும் புழுதிகாட்டில் எதிரொலித்தது.

ஆக்ரோஷமான போர் …………!

தன் தாய் பாண்டி பரதவ மண்ணை அபகரித்து அவமதித்த வந்தேறிகளுக்கு எதிரான வரலாற்றின் முதற்போர்

புழுதிகாட்டிலே பரதவரின் ஓங்கார தமிழோசை கேட்டு கிலியான அரேபிய துலுக்கன் எழுப்பிய அர்த்தமற்ற மொழி அறிந்து மூடு புழுதியிலே முகங்களை அறியாது அவன் தான் எதிராளி என தீர்மானித்து பரதவர்களும் மரவர்களும் அவர்களை வெட்டி சாய்த்தனர்.

ஆனாலும் " ஐயா ! காப்பாற்று என்கின்ற பரவ மறவர்களின் தமிழ் குரல் கேட்கவே இல்லை.

கொள்ளையரின் எண்ணிக்கை குறைய குறைய புழுதி படிய படிய கடலுக்குள் தாவி எதிராளிகள் தப்பி பிழைக்க நினைக்க முடிய… முடிய…. முடியவே….யில்லை.

இரப்பாளியின் கொள்ளைக்கூட்டத்தையே இரப்பாளியாக நினைத்து பரதவ மண்ணிலே கால் பதித்து பரதவரை அவமதித்த காரணத்திற்காக பரதவர் வெறியாய் வெட்டி கொன்றனர். குத்துயிரும் கொலையுயிருமாக கிடந்தவரை குழிவெட்டி புதைத்தனர்.

பரதவரும் போர்த்துக்கீசீயரும் கடும்போரின் அயர்வாலே கடலோரம் இளப்பாறி கிடக்க புதுப்பட்டின மறவர் மட்டும் கடலுக்குள் தாவிப் பாய்ந்தும்
தீவுக்குள் தேடி நுழைந்தும் கொள்ளையரை வெட்டிசாய்ந்தனர்.

[ஆனால் அப்படி பரவனுக்காக சூர்த்தெடுத்த அந்த மறவ‌ சொந்தங்கள் இன்று அவரெங்கே நாமெங்கே..? ]

அனைவரையும் சங்காரம் முடித்த போர்த்துக்கீசிய பரதவ படையும் மறவர் படையும் மீண்டும் கீழக்கரையை பொறி வைத்து தாக்கி அங்குள்ள மூர்களை அழித்ததோடு பரதவ சொந்தங்களான மரைக்காயர்களோடு மகிழ்ந்து கொண்டாடியது. சங்கு மரைக்காயர் குதிரை மரைக்காயர்
இல்லங்களில் பரதவ போர்த்துக்கீசியருக்கு விருந்து வைபவம் விமர்சையாக 
நடந்தேறியது.

அன்றிரவே கில் ப‌ர்னான்டஸ் டி கார்வெல்கோ கையெழுத்தோடு மதுரை நாயக்க அரசருக்கு போர்த்துக்கீசிய தலைமையின் ஆணை ஓலை சங்கு மரைக்காயர் வழியாக அனுப்பப்பட்டு கைது செய்யப்பட்ட தூயத்தந்தை, கேப்டன் கொட்டின்கோ மற்றும் அவரது குடும்ப்பத்தார், காத்தவராயன் மற்றும் போர்த்துக்கீசிய படை வீரர்கள் திருப்பி ஒப்படைக்க வேண்டப்பட்டது.

ஒரிரு நாட்களிலே மறுமொழியாக தூத்துக்குடியில் குறிப்பிட்ட நாளன்று முத்து ந‌கர் முருகன் கோவில் கல் ம‌ண்டபத்திலே அவர்களை ஒப்படைப்பதாகவும் பாக்கியாக தரவேண்டிய ஒரு இலட்சம் பணம் போர்த்துக்கீசியர் தரவேண்டும் என்று நாயக்க அரசரிடம் இருந்து சங்கு மரைக்காயருக்கு பதில் ஓலையும் வந்து சேர்ந்தது.

பரதவ மானத்தை வென்றெடுத்த சரித்திர புருஷர்களோடு மமதையுடன் பயணப்படும் உங்கள்.....

….…. கடல் புரத்தான் ……

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.