Our Blog

கன்னியாகுமரியை ஆண்ட வில்லவராயர்கள்


800 ஆண்டுகள் கன்னியாகுமரியை ஆண்ட பரதவ அரசர்கள் வில்லவராயர்கள்.

வில்லவராயன், பூபாலராயன், கலிங்கராயன், (காலிங்கராயன்), மழவராயன் ஆகிய தொழில் ஆகுபெயர்கள் எல்லாம் தொல்பழங்காலத்தொட்டு பரதவர் குடும்பப் பெயர்களாக நிலவியதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. பண்டைய தமிழகத்தில் பரதவர் 'அரையர்' என்று அழைக்கப்பட்டனர். பரதவர் அல்லது அரையர் என்பதன் பொருள் குறுநில மன்னர் என்று சூளாமணி திவாகர நிகண்டுகள் கூறுகின்றன. தொழில் இனம் இவற்றின் அடிப்படையில் மக்கள் அழைக்கப்படும் பொது, தொழில் பெயர் முதலிலும் இனப்பெயர் கடைசியுமாக சேர்ந்து அழைக்கப்படுவது வழக்கு. உதாரணமாக, தச்சன் என்பது தொழில் பெயர், ஆசாரி என்பது இனப்பெயர் இரண்டும் சேரும்போது தச்சாசாரி என வரும்; அது போலவே கொல்லன் + ஆசாரி = கொல்லாசாரி என வரும் பரதவரில் ஒரு சாரார் போர் வீரர்களாயிருந்தனர் என்பதற்கும் வில்வித்தையில் கைதேர்ந்தவராய் இருந்தனர் என்பதற்கும் சான்றாக பத்துப்பாட்டில் ஒன்றாகிய மதுரைக் காஞ்சிவரிகள் 139 முதல் 144 வரையிலும் கூறப்பட்டிருக்கிறது. 

பாலிமொழியில் எழுதப்பட்ட இலங்கை வரலாற்று நூலாகிய 'மகாவம்ச'வின் இணைநூலான 'சூளவம்ச' என்ற நூலில் பக்கம் 72 - பிரிவு 76 (LXXVI) வரி 94 - ல் முதலாம் பாரக்ரமாகுவிற்கு ஆதரவாக போர் தொடுத்த ஐந்து போர்களில் வில்லவராயர என்பவரும் ஒருவர் எனவும் பக்கம் 79 - பிரிவு 76 (LXXVI) வரி 163 -இல் வில்லவராயர கொல்லப்பட்டார் என்ற விவரமும் கூறப்பட்டிருக்கிறது. விற்போர் செய்பவன் = வில்லவன் இது தொழிற் பெயர் இனப்பெயர் அரையன் வில்லவன்+அரையன் = வில்லவரையன். தெலுங்கு மொழித்தாக்கத்தால் 'வில்லவரையன்' என்பது 'வில்லவராயன்' என்று ஆகியிருக்கலாம்.

அதுபோன்று நிலச்சுவான்தார்கள், நிலபரிபாலனர், நிலவரி வசூலிப்போர்கள், பூபாலன்+அரையன் = பூபாலரையன் - 'பூபாலராயன்' ஆகியிருக்கலாம். பரதவர் குறுநில மன்னர்களாய் ஆண்டகாலத்தில் நிலவரி வசூலித்தனர் என்பதற்கு இக்குடும்பப் பெயர்கூட ஒரு வரலாற்றுச் சான்றாகலாம். கலிங்கம் என்றால் புடவை என்று பொருள். எனவே புடவை வணிகர்கள் 'காலிங்கராயன்' என்றும், போரில் மாலு ஏந்திய வீரர்கள் 'மழுவராயன்' என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம். இன்றுகூட கடின இதயம் படைத்த ஒருவனை " மழுவன் " என்றே பரதவர் மத்தியில் அறியப்படுகின்றான். அதுவே மழுவராயன் என்று மருவியிருக்கலாம். 

1931 Travancore census- 800ஆண்டுகள் கன்னியாகுமரியை ஆண்ட பரதவ அரசர்கள் வில்லவராயர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. வில்லவராயன் என்ற அரசன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் திருப்பணி செய்த செய்தி அக்கோயிலில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. 

இப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்ட போர்த்துகீசிய குடும்பப் பெயர்களை சிலர் குலப்பெயர்களாகவே கொள்வது வருந்தத்தக்கது. போர்த்துகீசியர் வாழ்ந்த கேரளம், கோவா மற்றும் இலங்கையிலும் பல குலத்தவரிடையே இதே குடும்பப் பெயர்கள் வழக்கிலிருப்பது நோக்கத்தக்கது. -http://www.jaffnaroyalfamily.org/villavarayar.html ( The official website of the royal family of Jaffna(srilanka)

இங்கு அருள்பணியாளர் இயேசு சபை அதிரியான் கௌசானல் அடிகளார் (1850-1930) எழுதிய ‘Historical Notes on Tinneveli District’என்ற ஆங்கில கையெழுத்துப்படியில் உள்ள கீழ்வரும் வரிகள் குறிப்பிடத்தக்கவை! "பரதவர் பரதவராக மட்டுமே இருக்க விரும்புகின்றனர். வேறு எந்தப் பட்டத்தையும் விரும்புவதில்லை. பிற சாதியினருக்கு சாதிப்பட்டங்கள் தேவை. ஐயங்கார், ஐயர், சாஸ்திரிகள், என்று பிராமணரும், பிள்ளை என்று வேளாளரும், தேவர் என்று மறவரும் அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பரதவர் தங்களுக்கு எந்தப் பட்டமும் வேண்டுவதில்லை தங்களை பரதவர் என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறார்கள். பட்டங்கட்டி, பெர்னான்டோஸ் என்று பெயர்களுக்குப் பின்னால் சேர்த்துக் கொள்வதெல்லாம் இன்றைய 'சர்' பட்டம் போன்ற ஒன்றே ஆகும். இவற்றை சாதிப் பட்டங்களாக இவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. எனவே சாதிப்பட்டங்களைப் பொறுத்தவரைப் பரதவர் பிற இந்தியரிடமிருந்து வேறுபட்டு நிற்கின்றனர். 

மொழிபெயர்ப்பு வெளியீடு : நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்,தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி) பாளையங்கோட்டை-627002,2006: பக்கம் 16) 

கடலோரக்கவிச் சோலை - பக்கம் - 501, 502 தொகுப்பாசிரியர்-அருட்திரு.ஸ்டீபன் கோமஸ்

- Faustin Rayan

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.