Our Blog

இரத்த பூமி - பாகம் 9

கண்முன்னே கல்வாரி

இரப்பாளி கசையடி தண்டனையை நிறைவேற்ற கொள்ளையருக்கு ஆணையிட்ட போதே... பரதவர்கள் தங்கள் மனங்களை கட்டுபடுத்த ஆயுத்தமானார்கள். முதலில் தூய தந்தையை தரதரவென இழுத்து வரும் போதே பரதவர்கள் மத்தியில் கூச்சலும் குழப்பமும் உருவாக துவங்கியது...

முதல் கசையடி தூய தந்தையின் பின் புறத்தில் விழுந்த போது தூய வெண்ணாடை கிழிந்து இரத்தவரித் தடம் பதிய o jesus ஏசுவே.... என கதறினார். அவர் கதறல் வரும் முன்பே கட்டுப்படுத்த முடியாமல் பரதவர்கள் கூட்டம் பாய்ந்தெழுந்தது. சுற்றியிருந்த கொள்ளையரின் துப்பாக்கியின் தோட்டாக்கள் வெடிக்க வெடிக்க வெட்டுப்பட்ட மரம் போல பரதவர்கள் கீழே சாய்ந்தனர்.

பெண்களின் அழுகை ஓலம். அந்த கோட்டையெங்கும் முட்டித் தெறிக்க விழுந்தவர்களை காப்பாற்ற மாறிமாறி கட்டி பிடித்து தாங்கி கதற ......

இரப்பாளி சப்தமிட்டான் ….. நெட்டையன் மொழி பெயர்த்தான்…… 
ஏ.. சத்தம் ஒரு பயமூச்சி விடக்கூடாது….

இந்த நோஞ்சான் துறவிக்காக வீர பரதவர்கள் உயிரை விட போகிறீர்களா......

நல்லது.........உங்களையெல்லாம் கொன்று விட்டு…. நான் யாரை ஆளுவது யார் எனக்கு காணிக்கை தருவது….. சகோதரா….. துப்பாக்கிய இங்கே திருப்பு…….

இந்த போர்த்துகீசியரை கொன்னுப்போட்டா தான் இரப்பாளி ராஜா ஆகமுடியும்.

வீரர்களே....

இடுப்புக்கு கீழதானே சுட்டீங்க......? பாரம்பரிய பரதவரே உங்க ஒவ்வொரு உயிரும் ஒரு கோடிக்கு சமம். இனி நீங்க நினைச்சாலும் சாக முடியாது.. அடிபட்டவனை எல்லாம் தூக்கி அப்பால கொண்டு போய் கிடத்து. என ஆணையிட்ட இரப்பாளி

நல்ல பிள்ளைகளா நான் சொல்லுவதை செய்யணும் , என்றபடி கண்ணை காட்ட துப்பாக்கியின் பின்கட்டை கொண்டு கேப்டனின் கழுத்தோடு அடித்தான் நெட்டையன். தளபதி... அப்படியே குப்புற விழுந்தார். அவரது மனைவியும் குழந்தையும் கதறி அழுது துடிக்க.. பரதவர்கள் எதிர்ப்பு குறைந்தது போல இரப்பாளிக்கு தெரிந்தது. பரதவரின் பலவீன பாசத்தை புரிந்தவன்

தனது நீண்ட வாளை உருவி சுழற்றி அப்படியே தூய தந்தையின் கழுத்தருகே நிறுத்தினான். கூட்டமே அலறியது. முத்தாரம்மா காப்பாத்து…. முருகா ஈசுவரா காப்பாத்து….. மாடா, எசக்கி, என தாங்கள் இதுவரை வழிபட்ட தெய்வங்களை அவரவர் குடும்ப தெய்வங்களின் பெயரை சொல்லி அழைக்க ஒரு சில பரத்திகள் இரப்பாளின் வம்சத்தையே வகை கெட்டு அறுத்து கிழித்தனர்

சப்தமிட்டு மிரட்டி அமைதியாக்கின இரப்பாளி சொன்னான்,
இப்போ எனக்கு தேவை சில தகவல்கள் …..
அதை கொடுத்தால், இவரை விடுவிப்பேன்…...
பொய் சொன்னால், அவனை அப்பவே அப்படியே கொன்னேபோடுவேன் தைரியமுள்ள ஆம்பிளை உடனே கிட்டவா என சீறினான்.

எவரும் எழும்ப வழியில்லை அப்போதுதான் முடிவற்ற கொடுமைகளுக்கு முடிவு வர தன் மக்களை காக்க தன் தந்தையை பற்றி தமையனை பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க வள்ளியம்மை நாச்சியாரின் பக்கத்தில் அழுதபடி இருந்த.மீனம்மை நாச்சியார் எழும்பினார்கள். இதை இரப்பாளி கவனிக்கும் முன்பே அடப்பனார் கவனித்து சத்தமாக ... இதோ பாடன் வருவான் என்றார். ஒன்றும் அறியாத பாடன் பெரியவர் அடப்பனார் ஆணையை கேட்ட மறு நொடி எழுந்தான், அவனை கண்டதும் இரப்பாளி அதிர்ந்தான்.

7அடி உயரம் 2 இரப்பாளியின் தேகம் புடைத்தெழுந்த திமில் தோள்கள் முறுக்கேறிய கைதசைகள் கவசம் கூட்டினாற் போன்ற கரும்பாறை மார்பகங்கள் என பாடன் பரதவரின் அடையாளமாய் இருந்தான். நீண்ட தலைமுடியை சுற்றி கொண்டை போட்டிருந்தான். காதில் பெரிய முத்து கோர்த்த தொங்கட்டம் ஆட இரப்பாளியை நோக்கி மதயானை போல் முன்னேறினான்.

தென் பாண்டி அரசர் கொற்கை விடுத்து மதுரை இடம் பெயர்த்த போது இங்கேயே கொற்கையில் தங்கிப் போன பாண்டிய போர்படை தளபதி படையன் வம்சாவழி வந்தவன் இந்த பாடன்.அவனை அருகே நெருங்க விடாது தூரத்திலே நிறுத்தினான் இரப்பாளி இப்போது.. இரப்பாளி கேள்வியை நெட்டையன் கேட்டான்.

எங்கே உங்கள் ராஜா..??
ஈழம் போயிருக்காவ
உண்மையாகவா
ஆமாம் அவரு மகனுக்கு பொன்னு பாக்க குடும்பத்தோடு போயிருக்காவ 
எங்கே தளபதி... ?
யாரவரு தெரியாதே 
நேற்று எங்க தளபதியை கொன்ன அண்டானியோ பிராங்கோ எங்கே..?
உண்மையை சொல்கிறாயா என்று கேட்பதற்குள்,

அப்போது கொள்ளை தளபதி ஒருவன் சத்தமாக சொன்னான். யாரும் எங்கும் போகவில்லை கூட்டத்திற்குள் இங்கேதான் எங்கோ இருக்கிறார்கள். ராசாவின் அரண்மனையிலே நேற்று கூட விருந்து நடந்திருக்கிறது உணவுகள் இன்னும் இறைந்து கிடைக்கின்றன இப்போது தான் பார்த்தேன் என உண்மை விளம்பினான்.

சினம் கொண்ட இரப்பாளி கலவரமானான், இரப்பாளி அவன் வாளை எடுத்து தூயதந்தையை கொன்றே போடுவான் என பரதவர் திகிலடைய அடப்பனார் சத்தமிட்டார். நிறுத்துங்கள் நான் சொல்கிறேன் என்று .பதில் வந்த திசை நோக்கிய இரப்பாளி சைகை காட்டி அழைக்க முன்னே சென்றார் அடப்பனார். நெட்டையன் கேட்டான் எங்கே தளபதி? 

இதோ தளபதி, காத்தவராயன் என கூவி அழைக்க 

காத்தவராயன் ஏதும் அறியாது - ஆனால் அடப்பனாரின் எண்ணம் அறிந்தவனாக சபை முன்னே நின்றான்.

போர்த்துகீசிய தளபதி இவனா..? இல்லை தளபதி உடையில் இருந்தவன் இவன் என்றார். பரதவரின் முகச்சாயல் ஒரே மாதிரியாக உணர்ந்த அரேபியர்களுக்கு காத்தவராயன் தளபதியாக தோன்றினான். ஆமாம் என கொள்ளையர்கள் தலையாட்ட காத்தவராயன் கைகள் பிணைக்க பட்ட கைதியானான்.

மக்களின்றி தனி விசாரணை நடத்தவும் தனது அடுத்த கட்ட அரசியல் ராஜா கனவுக்கான நகர்வுகளை தொடரவும் திட்டமிட்ட இரப்பாளி. மீண்டும் அனைவரையும் ஆயுதக்கிடங்கிலும் ஆலயத்துக்குள்ளும் அனுப்பி வைத்து விட்டு கைதிகளையும் அடப்பனாரையும் அழைத்து கொண்டு போர்த்துகீசிய இராணுவ அலுவலகத்துக்குள் நுழைந்தான்.

நெட்டையனை தவிர அனைவரும் வெளியேற்றி விட்டு கதவை இழுத்து மூடியதும் முற்றிலுமாக மாறி போனான் இரப்பாளி. அடப்பனாரை சினேக புன்னகையோடு அமரவைத்தான். நயவஞ்சகமாக உரையாடினான், நெட்டையன் சொன்னான். உங்க ராசா கிட்ட சொல்லுங்க ....

உங்களுக்கு முழு விடுதலை……. உங்களுக்கு முழு ஆயுத பலம்……. உங்களுக்கு புதிய உலகம் போற்றும் அல்லா எனும் கடவுள் அனைத்திற்கும் நான் வழி செய்கிறேன்.

அடப்பனாரும் அதே கனிவுடன் முதலில் அடக்கு முறைக்கு அடிபணிபவரல்லர் பரதவர். இரந்துவரும் இரப்பாளிக்கும் இருப்பதையெல்லாம் இறைப்பவர் நாங்கள் இவர்களை விடிவியுங்கள் இல்லாது எந்த மாற்றமும் நடைபெறாது. உங்கள் எண்ணப்படி எல்லாமும் நடக்க - எங்க ராசா வரட்டும் அதுவரை அமைதி காப்போம்,

அப்போது கதவு தட்டப்பட்டு நாயக்க தளபதி விதாலன் புன்னை பட்டினம் வந்து விட்டதாக சொல்ல கோபமான இரப்பாளி கதவை திறந்து வெளியே போனான். இங்கேயே இருங்கள் வருகிறேன் என்றபடி நெட்டையனும் வெளியே போய் கதவை அடைத்தான். துணிந்த அடப்பனார் தூயதந்தையை கட்டியணைத்து தேம்பினார். அனைவரின் கட்டுகளை அவிழ்க்க வைத்தார்,

அடுத்தாரை காப்பதற்கா காத்தவராயன் துணிந்த அடப்பனார் தூயதந்தையை கட்டியணைத்து தேம்பினார். அனைவரின் கட்டுகளை அவிழ்க்க வைத்து இருக்கையில் அமர்த்தி இளைப்பாறவைத்தார். ஆனால் காத்தவராயன் மட்டும் மௌனமாய் இருந்தான். என்னாச்சி ராயா கோபமா - ஐயா உன்னை எதிரிகளிடம் கையளித்தேன் என்றான். கவலையோடு கேட்டார். இல்லை எனக்கு தெரியும். கொற்கை கோ வைத்தான் தேடுகிறார்கள் என்று ஆனால் அதுவல்ல எனது சிந்தனை தலைவரில்லாமல் கொற்கையில்லாமல் 

இரப்பாளி ஒரு பக்கம் , நாயக்கன் பக்கம், தந்தை - போர்த்துகீசியர் ஒரு பக்கம், நாம் ஒரு பக்கம் , என்ன சிக்கல் இது... முடிவு எது – எப்படி நாமும் நமது சமுதாயமும் மீண்டு வருவோம்.

தூயதந்தை வானம் பார்த்து சொன்னார்...நாளை அனைத்தும் முடிவடையும்... நிச்சயம் முடிவடையும். கர்த்தரின் கிரியையால் அதுவாக நடக்கும். கதவு திறக்கப்பட்டு நெட்டையன் உள்ளே வந்தான் அனைவரது கை கட்டுகள் அவிழ்க்கப்பட்ட நிலையை கண்டவன் கத்த அவனையும் தாண்டி அடப்பானார் சொன்னார். இன்னும் ஓரிரு நாழிகைக்குள் அனைவரும் விடிவிக்கப்படவேண்டும் இல்லை எங்கள் உயிர் போனாலும் இரப்பாளியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இதுதான் முடிவு என எகத்தாளமாக கூறியபடியே வெளியேறினார் அடப்பனார்.

அங்கே நாயக்க படைகள் சாரை சாரையாக கோட்டைக்குள் நுழைந்து கொண்டிருக்க நாயக்க பெரும் படை வீரர்கள் புடை சூழ விதாலன் உள்ளே நுழைந்தான், பரத குலத்தின் பரம வைரி விதாலனை காணும் போதே அடப்பானருக்கு பற்றிக் கொண்டு வந்தது .

விதாலன் கோபத்தின் உச்சியில் இருந்தான். பரதவருக்கு எதிரான சதியில் நாயக்கரையும் சேர்த்து சதிக்கும் இரப்பாளியின் துரோகத்தையும் தன்னையே அச்சுறுத்துவது போல தன்வீரனை கொன்று போட்டதையும் அறிந்து எண்ணி எண்ணி இரப்பாளியை தாக்கி ஒழிக்கும் எண்ணத்தோடுதான் பெரும் படை கூட்டி வந்தான்.

நாயக்கனும் இரப்பாளியும் தனியே உரையாடி முடிவு எடுத்தனர். போர்த்துகீசிய கேப்டனையும் - குடும்பத்தையும் தூயதந்தை மற்றும் காத்தவராயனை, மீதமுள்ள 17 வீரர்களையும் தங்களிடம் ஒப்படைக்க விதாலன் கேட்க. கடலோரம் முழுவதிலும் அவர்களை காட்டி பயமுறுத்திதான் தனது ஆட்சியை நிறுமாணிக்க நினைத்திருந்த இரப்பாளி.

இப்போது இரப்பாளியின் படைகள் காட்டிலும் நாயக்கர் படைகள் அதிகமாக கோட்டைக்குள் நுழைத்து விட்ட நிலையில் அடுத்த கட்டம் என்ன என்பதை நினைத்தபடி நான் இங்கே அனைத்தையும் கவனித்து கொள்கிறேன். நீங்கள் கிளம்புங்கள் உங்களுக்கு வர வேண்டிய கப்பம் வந்து சேரும் என இரப்பாளி கூற கொக்கரித்தான் விதாலன். யார் இடத்தில் வந்து யார் கப்பம் வசூலிப்பது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கடி பேச்சுவார்த்தை முடிவில், இரப்பாளியை நாயக்க அரசின் பிரதிநிதியாக இங்கே இருந்து வரி வசூல் செய்து விதாலனிடம் சமர்ப்பிக்கவும் மாதம் அதற்கான வருவாயில் ஒரு பங்கை இரப்பாளிக்கு நாயக்க அரசு தருவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு அரசியல் கைதிகளான தூயதந்தை கேப்டனும் அவர் குடும்பமும் வீரர்கள் 17பேரும் மற்றவரோடு விதாலன் வெளிக்கிளம்பினான் .

கோவில் மணி அடிக்கப்பட மக்கள் கூட்டமாய் வெளியே ஓடி வந்தனர். அங்கே விதலான் தன் படையோடு தூய தந்தையையும் மற்றவரையும் அழைத்து கொண்டு தெற்கு வாசல் வழி வெளியேறினான். பரதவர்கள் கண்ணீர் விட்டு கதறினார். காத்தவராயனின் தாய் அடுத்தாரை காப்பதற்கா என் பிள்ளையை காவு கொடுத்தேன். என மண்ணில் புரண்டு புலம்பியழுதாள். நாயக்கனின் ஒரு வீரன் கூட இல்லாமல் அனைவரும் வெளியேறி இருந்தனர் .

எங்குமே மயான அமைதி இப்போது இரப்பாளியின் படைகள் மீண்டும் மக்களை சுற்றி வளைக்க இரப்பாளி பேசினான் அல்லாவின் கருணையை பெற்றவர்களே..... எனது நாட்டின் மக்களே..... நமது புதிய ஆட்சியை மக்களுக்கு தெரியப்படுத்த பெரியவர்கள் கூடி ஊர் ஊராக சென்று தெரியப்படுத்துங்கள் அனைவரையயும் எனது பதவியேற்புக்கு அழைத்து வாருங்கள் என்றபடி அடப்பனார், பாடனை நோக்கி அழைக்க ,அடப்பனார் இன்னும் சிலரை அழைத்து கொண்டு இரப்பாளியிடம் சென்றார்.

எங்கே எம் தந்தை எங்கே எம் காத்தவராயன் என அடப்பனார் ஆவேச குரலெழுப்ப இடைமறித்த நெட்டையன் சொன்னான். கப்பத்திற்கு பிணையாக கொண்டு போய் உள்ளனர். பதவி ஏற்பு நாளன்று நாங்களே மீட்டு வருவோம் என்று பயமே இல்லாமல் பாடன் சொன்னான். ஆழியில்தான் உங்கள் பதவியேற்பு என்று என்ன என நெட்டையன் கேட்க காணியாளன் சொன்னான் ஆடி மாசமா பதவியேற்புன்னு கேட்கிறான் என்று. மேலும் கடமைக்காக இரப்பாளி சொன்னவைகளை கேட்டு இரப்பாளியின் ஆணை நூலையும் பெற்று கொண்டு வடக்கு பரதவ கிராமங்களுக்கும், தெற்கு பரதவ கிராமங்களுக்கும், கொள்ளையர்களின் கப்பல்களிலே பயணமானார்கள். இவ்வாறாக இரப்பாளி படையின் பெரும் பகுதி கோட்டையை விட்டு வெளியேறியிருந்தது. 

பாண்டியன்பதியின் அரண்மனை சமையலறையில் சமைத்து கொள்ளையர்கள் உண்டிருந்தார்கள். பாண்டியம்பதி அரண்மனையில் இரப்பாளியும் நெட்டையனும் தங்கிருந்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல உணவு உண்ட மயக்கத்தில் இரப்பாளி உறங்கிப்போனான் .

கோட்டையை சுற்றி காவலுக்கு நின்ற கொள்ளையர்களை தவிர அனைவருமே நித்திரையில் ஆழ்ந்து போயினர். இரண்டு நாட்களாக தூங்காத மக்கள் தூய தந்தையை நினைத்து, காத்தவராயனை நினைத்து, காணாமல் போன கொற்கையை நினைத்து அழுது அழுது பசியோடு அயர்ந்து தூங்கி போயிருந்தனர் .

அதிகாலை நேரம் தூயதந்தை இரத்த கோலத்தோடு இரப்பாளியின் நெஞ்சுக்குள் வாள் கொண்டு குத்தி இறக்க துடித்தபடி கனவில் இருந்து எழுந்தான் இரப்பாளி. இப்போது அவன் கால்களில் பிசுபிசுப்பாக ஏதோ ஒட்ட உற்று நோக்கியவன் பேயறைந்தாற்போல் அலறினான் ..அவன் அலறல் எங்கும் ஒலிக்க ..... கொள்ளையர்கள் விரைந்து வந்தால் அங்கே கழுத்திலே ஒரு குத்துவாள் இடதிலுருந்து ஊடுருவி வலதாக வெளியே நீண்டிருக்க.... ரத்த வெள்ளத்திற்கு நடுவே கிடந்தான் இரப்பாளியின் பேச்சாளன் நெட்டையன். 

இரப்பாளி முழுவதுமாக உடைந்து போயிருந்தான். தன் அருகிலே கிடந்தவன் பிணமாக கிடக்கிறான் கொலையாளிக்கு நான் தான் முக்கியமானவன் என்னை ஏன் கொல்லவில்லை..என் தளபதியை கொன்ற அதே அடவிலே அதே வேகத்தில், யார் அவன் எங்கே அவன் சிறிது நேரத்தில் இரப்பாளிக்கு பைத்தியமே பிடித்து விடும் போல் ஆனது .

நெட்டையனின் உடலை எடுத்து கோட்டையின் மைதானத்தில் வைத்திருந்தார்கள். மக்கள் அதை தூரத்தில் நின்றே கவனித்து போனார்கள். கழுத்தில் குத்தியிருந்த குத்துவாளை கண்டதும் உற்சாகத்தில் தன்னையும் அறியாமல் காணியாளன் கத்தினான். கொற்கை கோ .....சின்ன ராசா என பின்னாலிருந்து தட்டினான். அவசர குடுக்கை என கொற்கை கோ. 

நெட்டையனின் முடிவை எண்ணி நிம்மதி இழந்திருந்தான் இரப்பாளி. பாவி இரப்பாளிக்கு புலிவால் பிடித்த கதைபோல புன்னையை பிடித்த கதையாயிற்று. இரப்பாளியின் கதை முடிக்க புன்னை கோட்டையிலே கொற்கை கோ துடித்திருக்க கொச்சின் கோட்டையிலே பாண்டியனார் படை திரட்டியிருக்க... 

அடப்பனாரோடு போன கொள்ளையர்கள் ஆழியோடும் பரதவரூர் மண்ணடியோடும் போயிருக்க காலமெனும் காற்று பரதவருக்காய் வீச காத்திருந்தது.

(தொடரும்) 
கடற்புரத்தான் 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.