Our Blog

இரத்த பூமி - பாகம் 3


பரதவ தலைவனின் போர் வியூகம்

பரதவ தலைவர் விக்ரமாதித்ய பாண்டியன் அந்த நடுநிசி வேளையிலே மன்னார் பரதவ தீவுகளில் ஒன்றில் தன் பட்டங்கட்டிமார் சிலரோடு மறவ குல சொந்தங்கள் சூழ விவாதித்து கொண்டிருந்தார். 

புன்னை எதிர் தாக்குதல் பற்றி விவரித்துக்கொண்டிருந்தார். ஏரல் மதகு மூடப்பட்டால் கடைமடை வரை தண்ணீர் வற்ற குறைந்தது ஒரு நாளாகும், எனில் நாளை நள்ளிரவில் தான் இரு படைகளும் இருகரை தாண்டி புன்னை வர முடியும் . இங்கே படை கரை தாண்டவும் ஏரலின் மதகுகள் மீண்டும் ஏரலர்களால் உடைக்கபடும். ஆழ்கடலில் உள்ள மூர் படைகள் காயல் கரையை நாளை மறுநாள் அதிகாலை தான் தாக்கும். 

நம் கவனம் கரையை நோக்கியே இருக்க பின்னாலும். வடக்கு தெற்கிலிருந்து நாயக்கர் படைகள் உள்ளே வரும். பகல் வரை எதிர்த்து எதிராளிகளை சோர்வாக்கி மாலையில் பின் வாங்கி கோட்டை புகுந்து விட வேண்டும் . இருட்டும் வேளையில் எதிரிகளை கோட்டைக்குள் வரவழைக்க வேண்டும். ஏற்கனவே கடற்கரை ஊர்களுக்கு ஓலை அனுப்பியாகிவிட்டது அவர்கள் மூன்று திசையும் தாமதமாக வந்து காத்திருந்து ஆணை கிடைத்ததும் கோட்டைக்கு வெளியேயும் உள்ளேயும் தாக்குதலில் இணைவார்கள்.

பரணியின் வெள்ளம் மீண்டும் சூழ தப்ப வழியின்றி இருட்டோடு இருட்டாக எதிரிகள் கோட்டைக்குள் புதைக்கபடுவார்கள். இதை என் இளவல் கொற்கை கோ செய்து முடிப்பான் என சொல்லவும்.... பெரும் தலைகள் கூட்டத்தில் மறவ தலைவரோடு வந்திருந்த இளம் மறவன் ஒருவன் ஆர்வ கோளாரு காரணமாக போத்தி... பிரமாதம்.. எப்படி இப்படியெல்லாம் என வாய் திறப்பதற்குள் பொடியா நிறுத்துல ... கொல்லம் பட்டறையில ஈ க்கு என்ன வேலைனு அதட்டினார்.

மறவ குல தலைவர் போதும் விடுங்க.. வளரும் பிள்ளை வேகத்தை தடுக்காதீங்க.. பாண்டியர் சொல்ல அது இல்ல .. போத்தி.. அவனுக்குத்தான் சொல்றேன். மறப்பயலே... கால காலமாக இதுதான் எங்க வேலை எத்தனை போர் பாத்திருப்போம், எத்தனை பேரை புதைத்திருப்போம். போத்தி சொன்னது பாதிதான் அதுவா நடக்கும் போது தான் தெரியும் மீதி....? .

தெலுங்கு நாயக்கமாரோடு சில பேரு இருக்கானுவ பாண்டியன்னு.. அவ்னவுளா பாண்டியன் த்தூ........ பாண்டியன் தன்னைத்தவிர வேற எவனையும் அரசனா நினைச்சதில்லை எவனுக்குமே இதுவரை வணங்காத திமிற் கொண்ட மீன் கொடி பாண்டியரோட உண்மையான பரம்பரையடா.. இது.

இந்த வீரமும் விவேகமும் இல்லைன்னா பரவனும் மறவனும் இப்போ இருந்திருக்கவே முடியாது... புரிஞ்சிக்கோ.. இளம் மறவன் பயந்து ஒதுங்க மறவர் தலைவர் சரி போத்தி , எங்கள் பங்கு.. என்ன..?? என கேட்க நம் பங்கு ........ நாம் இங்கேயே காத்திருப்போம். நாளை போர்துகீசிய படைகள் மதுரையிலிருந்து திரும்பி வேதாளை வரும் அவைகளையும் சேர்த்து கொண்டு, கீழக்கரையை தாக்கி அழிப்போம் மரக்காயர்களையும் சேர்த்து, என மறத்தலைவர் அழுத்தம் சொல்ல ... இல்லை இல்லை மரக்காயர்கள் நம் பிள்ளைகள் மூர்களின் அடிமையாகி விட்டார்கள்… அவர்களை விடுவிக்க வேண்டும்.

ஆனால் ஒன்று.. அந்த நாயக்க ................................விதாலனின் .................................. பிடுங்கி எடுத்து.. என திடீரென எரிமலையானார் பரதவ கோ விக்ரம ஆதித்ய பாண்டியர். ஆவேசம் கொண்ட அந்த அரிமாவின் கர்ஜனை மன்னார் ஆழி எங்கும் எதிரொலித்தது....!

இளம் தலைவர் கொற்கை கோ வின் தலைமை புன்னை கோட்டை ஆலயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ..? என்பதனை கொற்கை கோவிடம் கேட்க கேப்டன் தயங்குவதை உணர்ந்த தூய தந்தை ஹென்ரிக்கஸ்..

கொற்கை கோ, தங்களது திட்டம் தான் என்ன..? மக்களை எப்படி காப்பற்ற போகிறீர்கள் அனைவரும் தப்பிச் செல்ல நம்மிடம் படகுகள் இல்லையே, பாதி மீனவர்கள் கடலுக்கு தொழிலுக்கு சென்றிருப்பார்களே.. என வேதனையில் புலம்ப... இதோ.. நமது பாதுகாவலர் மன்னார் கேப்டன் மனுவேல் ரொட்ரிக்கஸ் கொட்டின் கோ அவர்கள் ஏதேனும் வழிவகை வைத்திருப்பார் சொல்லுங்கள் கேப்டன் என கொற்கை கோ பவ்யம் காட்ட

எனக்கு... எப்படி... இது.. என கேப்டன் தடுமாற, நல்லது என்னோடு வாருங்கள் என அனைவரையும் அழைத்து கொண்டு ஆலயத்தை விட்டு வெளியே வந்தார். அங்கே கோட்டைக்குள்ளே அந்த நடுநிசி இருட்டு வேளையிலும், புன்னை நகர் பரதவர்கள் ஆடவரும் பெண்டீராக ஆயிரம் பேர் அமைதியாக அமர்ந்திருந்தனர்.

தூரத்தில் தீவட்டிகளோடு இருந்த போத்துகீசியர் சிலர் கூட்டம் விலக்கி வந்து கொற்கை கோவின் பின்னால் அணி வகுத்து நின்று கொள்ள கேப்டனும், உடனிருந்த தூயதந்தை மற்றும் போர்துகீசியருக்கு அப்போதுதான் புரிந்த போர்த்துகீசிய உடையிலிருந்தது பரதவ மறவர்கள்.

தன்னுடைய கோட்டையில் தனக்கே தெரியாமல் என்ன நடக்கிறது. இங்கே பார்த்தால் ராத்திரி சத்தமில்லாமல் ஒரு ஊரே ஓரிடத்தில் கூடியிருக்கிறது ஒவ்வொரு நிமிடமும் போர்த்துகீசியருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தவணை முறையில் காத்திருந்தது.

ஒருவழியாக சுதாகரித்த கேப்டன் கொற்கை கோ விடம் இங்கே என்ன நடக்கிறது என தயங்கியபடி கேட்க சற்று பொறுங்கள் என்றபடி பக்கத்திலிருந்த கிணற்றின் சுற்றுச் சுவர் மீது லாவகமாக துள்ளி ஏறி நின்றார் கொற்கை கோ...அமைதியாய் இருந்த கூட்டம் ஆரோகரித்தது கை தூக்கி அமைதியாக்கிய இளம் தலைவன் சப்தமிட்டு பேசினார்.

பாண்டி பரதகுடி மக்களே..! எங்கய்யா... பாண்டியபதியின் பிள்ளைகளே..! எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கும்.....? நாளை இரவு முதல் நமக்கு மீண்டும் வீர விளையாட்டு ஆரம்பம். காலகாலமாக எல்லா அரசாங்கத்திற்க்கும் கொட்டி கொட்டி கொடுத்தது பரவமார்.. நம்ம கடலை புடிங்கி பஞ்சம் பிழைக்க வந்தவன் கிட்ட தூக்கி கொடுத்தானுவ அதை இந்த வெள்ளைகாரனோடு சேர்ந்து மதம் மாறி எத்தனையோ பேர் உயிரை கொடுத்து திருப்பி எடுத்துக்கிட்டோம்.

இப்போ இந்த சாமிமாருக்கும், காவலாயிருக்கிற வெள்ளைக்கரனுக்கும் குடுக்கிறத எனக்கு தா ன்னு கேட்கிறானுவ. நாட்டை நடத்த வக்கில்லாத வடகத்தி நாயக்கனும் உழைத்து பிழைக்க துப்பில்லத துலுக்கனும் கடலை சொந்தம் கொண்டாடுற பரவன் கடலுக்குள்ளே தான் கிடக்கனும்னு புதுசட்டம் போடுவானுவ போல கடலென்ன கரையையும் ஆண்டவனுவ நாமதான்னு இந்த வந்தேறி வடுகறுக்கும் புரியலை மூளை கெட்ட மூருக்கும் தெரியலை இன்றோடு இவன் கதை முடித்தாத்தான்

நாமளும் நம்ம சந்ததியும் நிம்மதியா வாழ முடியும். இல்லை எதுக்காம இவனுவளுக்கு பணம் கொடுத்தா பாண்டியமார் காலெம்மெல்லாம் அடிமையாத்தான் வாழனும். மக்களே யாரும் பயப்பட தேவையில்லை எல்லாத்துக்கும் நாளைக்கு முடிவு கட்டிருவோம் நாமதான் வெல்லப் போகிறோம். எல்லாரையும் கோட்டைக்குள்ளே வரவிட்டு அவ்வளவு பேரையும் இந்த இடத்துக்குள்ளேயே குழிதோண்டி புதைக்க போகிறோம்.

சொல்வதை கவனமாக கேளுங்கள். போர்படை ஆயூதங்கள் அனைத்துமே கோட்டை மதிற்சுவரின் உள்ளேயும் வெளியேயும் சுவர் ஓரத்திலே வழி நெடுக புதைக்கப்பட்டிருக்கின்றன தேவையின் போது எடுத்து கொள்ளுங்கள். கிழக்கு வாசலுக்கு எதிராக கடற்கரை வரை 10 - 15 அடி வீதி தவிர கிழக்கு வடக்கு தெற்கு என மணலுக்குள் வலைகள் விரிக்கப்பட்டு மறுமுனைகள் கோட்டைக்குள் விடப்பட்டிருக்கின்றன அதை வீரர்கள் பார்த்துக்கொள்வார்கள். மேற்குபகுதியை மட்டுமே மக்கள் பயன்படுத்துங்கள்.

இதுவரை மேற்கே இல்லாத புதுவாசல் ரகசிய வாசல் உருவாக்கப்ப்ட்டிருந்தது. ஊர் குடியினவர் வீட்டின் அடுக்களை சுவரை உடைத்து கோட்டை சுவரையும் உடைத்து புதுவழி ஆயுத கிடங்குக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது, பெண்கள் குழந்தைகள் தாக்குதல் தொடர்ந்ததும் தப்பி உள்ளே வந்துவிடுங்கள்.

அப்போது வீர பரத்தி ஒருத்தி ஐயா..! இளய ராசா இந்த கேடுகெட்ட மூர் பயனுவ முதல்ல பரத்தியளதான் வதைப்பாங்களய்யா.. அவனுகைல மாட்டி சீரழியும் முன்னால எங்கள கொன்று போடுங்க ராசா என ஓலமிட மொத்த கூட்டமும் தேம்ப ஆரம்பித்தது... ஒரு நொடியில் பலவீனமான கொற்கை கோ, நிறுத்து ஆத்தா யார் யாரை வதைக்கிறது. நம்ம பரதர் குலத்து தெய்வங்களே எங்க ஆத்தாமார் நீங்கதானே........! பேடி பயலுவ பரத்தி ஒருத்தியின் பாம்படத்தை அறுத்ததுக்கே 15000 தலை கெட்ட சாஞ்சவனுவ நாங்க.

அப்பிடியெல்லாம் நடக்காது நடந்தால் இதோ இங்கே கோட்டை மேல் பந்து பந்தா அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறதே வைக்கோல் எதிரிகள் மேல் உருட்டிவிட அதை உங்கள் மீது உருட்டிவிட்டு ஆம்பிளய நாங்களும் விழுந்து சாவோம். சாவை பத்தி ஏன் தாயி பேசுறிய நாம வாழ பிறந்தவனுவ
நீங்க பெத்த பரவமார் பிறறை வாழ வைக்க பிறந்தவனுவ இந்த நாட்டை ஆழ பிறந்தவனுவ நம்ம தலைமுறை உலகம் பூரா விரிஞ்சி தழைக்க போற பாண்டிய வம்சம் மக்களே சாவை பத்தி நினைப்பை விடுங்கள்.

கோட்டை இருக்கின்றன ஆனால் படைகள் தான் இல்லை, நாமே நமது படைநமக்கு கடலாத்தா தந்த வீரமே நமக்கு கொடை நாளை எல்லோருமே சேர்ந்து பகையாளிகளை அழிக்க போவது தான் காலத்துக்கு நாம சொல்லும் விடை.....

சரி சரி பேச்சை குறை என பரிச்சயமான குரல் மெதுவாக கொற்கை கோ காதில் விழுந்தாலும் கண்டு கொள்ளாமல், இளைஞர்கள் கிழக்கு வாசல் படை அலுவலகம் செல்லுங்கள் பெண்கள் மற்றவர் பதட்டபடாமல் வீடுகளுக்கு சென்று வேலைகளை முடித்து நாளை கோவில் மணி அடிக்கும் போது ரகசியவழி வழியாக உள்ளே வந்து விடுங்கள். உங்களுக்கான பாதுகாப்பு இடம் நாளை மாலைக்குள் தயாராகிவிடும்.

இப்போது கிளம்பலாம் என பேச்சை முடிக்க ஓரிரு பக்தியான பரத்திகள் சாமியை பேசச் சொல்லுங்கள் என சொல்ல.. ஏற்கனவே அழுது புலம்பி கொண்டிருக்கும் அருட்தந்தை இந்த ஆபத்திலிருந்து கடவுள் நம்மை காப்பாற்ற நாளை முழுவதும் 1000 பரமண்டலம், 1000 அருள் நிறைந்த மரியே சொல்லுங்கள் மக்களே, செங்கடலை பிளந்து காத்தது போல புன்னைகாயலை.. என்று ஏதாவது சொல்லி எதிர்க்கும் வீரத்தை இப்போதுதான் ஏற்றி விட்டுருக்கிறோம், மக்களை சரணாகதி ஆண்மிகத்தை நோக்கி தள்ளிவிட போகிறார் என நினைத்த கொற்கை கோ..

............. முடிவுகள் எடுக்க வேண்டியுள்ளதால் நாங்கள் கிளம்புகிறோம். மீதியை பட்டங்கட்டிமார் எடுத்து சொல்லுவார்கள் என்று கூறி திரும்ப ,கொற்கை கோ வின் கையைப் பற்றி இறக்கியது ஒரு கை அதுதான் கொற்கை கோவின் வலக்கை, இடக்கை , நம்பிக்கை.. நண்பன் காத்தவராயன், சரி சரி பேச்சை குறைனு சொன்ன குரலுக்கு சொந்தகாரன்.

உனக்கு ரொம்ப குறும்புடே இளய ராசாவையே கேலி பண்றே.. கொற்கை கேட்க ஆமா.. பயந்து போய் கிடந்தவங்களை அது இது னு சொல்லி தூக்கி விட்டுடே நாளைக்கு பயமே இல்லாம இருக்க போறானுவ அவனுவ வந்து நம்மள பொழக்க போறானுவ கொஞ்சமாவது பயம் இருந்தாதான்
எதிர்த்து நிக்க முடியும் தெரியுமா.

சரி அது உன் வழி.. நாம பிறகு பேசுவோம் வா... என.. கொற்கை கோ கேப்டனை நோக்கி செல்ல கேப்டன் அடுத்த அதிர்ச்சி என்ன தர போகிறாரோ என நினைத்தபடி புன்னகைக்க வாருங்களேன் ஆய்த கிடைங்கு செல்வோம் என கொற்கை கோ அழைக்க, கேப்டன், அருட்தந்தை, கொற்கைகோ, போர்துகீசியர்கள், போர்துகீசிய உடையணிந்திருந்த பரதவர்கள் என அனைவரும், மேற்கே இருந்த ஆயுதகிடங்கை நோக்கி நகர்ந்தனர். மக்கள் கலைந்த வண்ணமாயிருந்தனர், அதில் இரு பரவமார் தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

பார்த்தியா இவனும் இவன் ஐயா மாதிரி தான் சாமிமாரை நம்ம கூட சேரவுட மாட்டானுவ .. ஏதோ சாமிகிட்டே இருந்து பெரிசா படிச்சி இவனுவள முந்திருவோம்னு ஆமா.. அதானே மக்கள் ஆசையா சாமிய பேசச் சொன்ன.. வுட்டானா..? இவனுவ ஆட்டமெல்லாம் எத்தனை நாளைக்கி என சுய பொறாமையிலே கருவிக் கொண்டு போனார்கள்.

இன்றைக்கும் சிலர் சமுதாயத்திற்கு நல்லது செய்ய தெரியாதவர்கள் தெரிந்தாலும் மனம் இல்லாதவர்கள் குற்றம் கண்டுபிடித்தே பெயர்வாங்கும் புலவர்கள் இங்கிருக்கிறார்கள் அவர்கள் மத்தியிலே தன் சுய அலுவல்களை விட்டுவிட்டு பரத சமுதாய முன்னேற்றத்திற்க்காக சிந்திக்கும் அதனை நிறைவேற்ற உழைக்கும் உள்ளங்களை அதனால் அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டினை மக்கள் செல்வாக்கினை கண்டு வயிறு எரிந்து புறம் பேசித்திரியும் சேற்றை வாரி இறைக்கும் புளுக்க பரவர்கள் அப்போதும் இருந்திருக்கிறார்கள்

ஆனால் இன்னைக்கும் பாண்டியம்பதிகளின் தியாகத்தை இந்த பரத சமூகத்தின் வரலாறு அறிந்த மதத்தின் வஞ்சகம் புரிந்த பரதவர்கள் என்றும் மறக்காது கல்வெட்டாய் நெஞ்சங்களில் தாங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதனை இந்த கட்டுரை தாண்டி என்னால் ஆத்திரத்தோடு சொல்லாமல் இருக்க முடியவில்லை.. பொறுங்கள் .........என்னையே சாந்தப்படுத்தி கொண்டு தொடர்கிறேன்.
(தொடரும்)

கடற்புரத்தான் 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.