Our Blog

இரத்த பூமி


கடற்புறத்தானின் இரப்பாளி! பரதர் சமூக வழிகாட்டி மாத இதழிலும், நமது வலைத்தளத்திலும் ' இரத்த பூமி ' என்ற பெயரில் தொடராக ........


பரத சமுகமே

இரப்பாளி என்றும், ஈன இரப்பாளி என்றும் சாதரண‌மாக கொச்சை த‌மிழில் நாம் பேசும் வார்த்தை, பேராசை பிடித்தவனை கேவலமாக சித்தரிக்கும் வார்த்தையாகும்.  இந்த வார்த்தையின் வரலாறு நமக்குத் தெரியுமா..? இவ்வரலாற்றை  அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகும். 

இரப்பாளி.......

1530 களில் பரத சமுகம் தன்னை தற்காத்துக் கொள்ள பாரம்பரியத்தை காத்துக் கொள்ள அன்றைய அறிவியல் வளர்ச்சியான துப்பாக்கியையும் வெடிகுண்டையும் பெற்று கொள்வதற்காக போர்துகீசியரை நாடிய போது போர்துகீசியரால் பரதவருக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டன.

பாண்டியர்களின் எச்சமாய் இருந்த பரதவ பாண்டியர் தன் தமிழ் பழங்குடி இன குழுவை மீட்டெடுப்பதற்காகவும் எவருக்கும் அடி பணியாத தன் பாரம்பரியத்தை நிலை நாட்டவும், எடுத்த மகத்தான முடிவு அது. போர்துகீசிய பாதுகாப்பு பெறுவதற்க்காக போர்துகீசிய குடிமகனாக மாறி கிருத்துவத்தை தழுவியது தன்னை தனிமைபடுத்தி தற்காத்து கொண்டது.

2000 களில் உலகம் புதுபிக்கபட்டாலும் ஆழி கடல் வழி தோன்றிய தாய் தமிழ் பரத சமுகம் தன் இரத்த நாளங்களில் இனக் கலப்பில்லாத தன் மரபணுக்களில் தமிழ் பரதவ பாரம்பரியத்தை கடத்தி வந்து சேர்த்திருக்கிறது – என்பதனை அறிவார்ந்த பரத சமுக இளைய தலைமுறை நினைத்து கொண்டாட வேண்டிய சிதம்பர ரகசியம் இது.

1530 களில் போர்துகீசிய குடிமக்கள் ஆன பிறகு, நாயக்கர்களாலும் மூர் இனத்தவர்களாலும் திருவிதாங்கூர் இந்து நாயர்களாலும் சுற்றி வளைத்து சூரையாடப் பட்டதுதான் பரத இனம். போர்துகீசியரை அழிப்பதாக சொல்லிக் கொண்டு தமிழ் மண்ணின் உண்மை வந்தேறிகளும் இந்துத்துவா இஸ்லாமியர்களும் இணைந்து கொண்டு புத்தம் புது கிருத்துவத்தை மண்ணில் புதைக்க போர்துகீசியரின் குடிமக்களான இம்மண்ணின் பாரம்பரிய நிஜ வித்துகளான பரதவரை நிருமூலமாக்கிட கொடுஞ்செயல்கள் பல புரிந்துனர். பரதவ இனத்தையே அழித்து ஒழித்தனர்.

கடல் தாயின் பிள்ளைகளான பரதவ இனம் தரையில் உள்ள இனப் பகைவரிடம் இருந்து தப்பி பிழைத்து கடலுக்குள்ளும் கடல் தீவுகளிலும் உயிர் வாழ்ந்து மீண்டும் தன் உரிமையை நிலை நாட்ட தன் அரசு உடமைய பெற்று கொள்ள உயிரை பாதுகாத்துக் கொண்டனர்.

கடலையே கட்டிக் கொண்டு வாழும் பரதவ பாண்டியர்களை; நாயக்கரின் பாளைய பிரகடனத்தைபரிகசிக்கும் பரதவரை; புதிதாய் உதித்த போர்ச்சுகல் குடிமக்களை; மதம் மாறிய கிருத்தவர்களை; நிர்மூலமாக்க துணிந்த பரதவ எதிரிகளால் உருவாக்கப்பட்டது தான் வெடலை போர்க்களம் வெடலையில் பரதவர் வென்றதை ஏற்றுக் கொள்ள முடியாத நாயக்கர் பாண்டிய பெயர் தாங்கிய பல் இனக் குழுக்களை தமதாக்கி கொண்டனர்.

தரையினில் உள்ள தரங்கெட்ட தெலுங்கு நாயக்கன் தமிழ் பரத பாண்டியர்களை அடிமைபடுத்தவும் ஆட்சி செய்யவும் அனுப்பி வைத்தான் விதாலன் எனும் நாயக்க தளபதியை அழிக்க அழிக்க குறையாது இன்னும் இன்னும் எதிர்த்து வரும் பரதவ இனம் ஆழிக்கடலுக்குள் தப்பி செல்வதை ஆய்ந்து அறிந்தவன் பரத இனக் குழுவான மரைக்கயர்களை கொண்டு மரக்கலங்கள் செய்து முடிந்த வரை போராடினான்.

துப்பாக்கி பீரங்கி குண்டு இவற்றோடு சிலுவையும் வைத்திருந்த போர்துகீசியரோடு இளைந்தோடிய பரத சமுகம் தனது ஞான குரு தனது பாதுகாவலன் பரதவ‌ புனிதர் சவேரியாரால் போர்துகிசீயருக்கே பாதுகாப்பாய் பரதவ இனம் அமைந்தது தான் வரலாற்றின் திருப்புமுனை. சுவடில்லாமல் சுத்தமாய் துடைத்து ஒழித்தாலும் அலையின் நுரையிலிருந்து ஆர்ப்பரித்து எழும் ஆழி தமிழ் பரதவரின் அதிசயம் கண்டு அதிர்சியுற்ற விதாலன் பரதவ பகைவரின் பட்டியலை பரிசோதித்து பற்றி எடுத்தான். ஒர் பெயரை வெடலை போர்களத்தின் சூத்திரதாரி பரதவரின் பாரம்பரிய வைரி கோழிக்கோடு சமாரியன்.

தம்மவர் இனம் செழிக்க பொது எதிரி பரதவனின் கதை முடிக்க ஓரணியாய் நின்று ஓராயிரம் ஆலோசனை செய்து பெர்சியாவில் இருந்து கொண்டு வந்தார் ஒர் கடற் மாமிச பட்சி கடல் காட்டுமிராண்டி..... அவன் தான் இரக்கம் இல்லாத இரப்பாளி...........?

சங்க காலம் தொட்டே- திரைக்கடல் செல்வத்தாலும், துறைமுக நகரங்களாலும், சேர சோழ பாண்டிய அரசுகள் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கின. உழைக்கும் மற்ற வர்க்கத்தைக் காட்டினாலும் அளப்பரிய செல்வம் பரதவர்களிடமே இருந்தது காரணம்..... பாண்டி பரதவ முத்துக்கள் ..!

உலக பேரழகி கிளியோபாட்ரா கூட ஜூலியஸ் சீசர் பரதவ கண்டத்திலிருந்து வருவித்து பரிசளித்த, விலை மதிப்பற்ற கொற்கை முத்துக்களை உடலிலும், உடையிலும், உணவிலும் கூட பயன்படுத்தியதாக ரோமானியம் கூட பறைசாற்றுகிறது..!

இன்றய உலக பொருளாதார சந்தையை தங்க விலை கட்டுப்படுத்துவது போல..... அன்றய உலக பொருளாதார சந்தையில் பரதவரின் முத்துக்கள் கோலோச்சின.....!

விவசாய மக்கள் வருடம் முழுமைக்கும் பாடுபட்டாலும் இரண்டு, மூன்று அறுவடையில் மட்டுமே பலன் கிடைக்கும். அதிலும் - அரசாங்கத்துக்கு கிடைப்பது மிக சொற்பமே....... ஆனால் பரதவர்களின் அன்னை கடல் வயலில் நித்தமும் அறுவடை அதனாலே நித்தமும் குவியும் அரசுக்கு நன்கொடை......!

அந்நாட்களில்..... அரசாங்கத்துக்கு ஏற்றுமதி, இறக்குமதி, வரி செலுத்திய வியாபாரிகள் எனப்படுபவர் துறைமுக பட்டினங்களை சார்ந்தவர்களே. சாத்துவான், செட்டி, உமணர் போன்ற யாவருமே பரதவர்கள் என சிலப்பதிகாரம் பகர்கின்றது.......! 

இவ்விதமாக - பழந் தமிழ் பரத சமூகம் வழித்தோன்றிய அரசுக்கெல்லாம் இணையாயிருந்து இறைத்து கொடுத்தது, கடற் படை கொண்டு காவலாயும் நின்றது. அதனாலேயே அரசாங்கங்கள் பரதவரை மதித்து பட்டம், பதவிகள் தந்து இணையாக்கி கொண்டது. அவர்களுக்கான தனித்தலைமை, தனி சட்டம், கடல் உரிமை அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சிலப்பதிகாரத்து பாடல் வரி சொல்லும் மன்னவர் முறையோ; பரதவர் முறையோ; எனும் ஒற்றை சான்று மட்டுமே மேற் கூறியவற்றிற்கு போதுமானது....!

அணைத்தால் அன்பின் அடிமையாகவும்; அடித்தால் அழிக்கும் அசூரனாகவும்; பயணப்பட்ட பரதவர் வாழ்வு கடல் உரிமையை, தன்மான உணர்வினை, மீட்டெடுக்க மதம் மாறிய பிறகு, தென் தமிழகத்து அரசியலே நிலைகுலைந்தது....?

பரதவரின்; போர்த்துகீசிய தலைமையின் கை ஓங்கியது; பெரும்பான்மை வருவாயை இழந்த நாயக்க அரசு செய்வதறியாது விழித்தது.....? பதட்டத்தோடு பரதவரை சூறையாட துடித்தது, தனது வடுகர்களை கடலோர பரதவர்கள் மீது ஏவி விட்டு வதைத்தது...... பரதவ கிராமங்களை அடிக்கடி தாக்கி கொள்ளையடிப்பதை வடுகற்களும், மூர்களும் வாடிக்கையாக்கி கொண்டனர், நாயக்க அரசே நாயக்க அரசின் அங்கீகரிக்கப்பட்ட கொள்ளைக்கூட்டத்தை உருவாக்கிய கால கொடுமை இது.....?

கள நிலைமையை உணர்ந்த பரத சமூகம் அசுர பலம் கொண்டு எதிர்த்தாடியது. இந்த நிலையில்தான் நாயக்க தளபதி விதாலன் பரதவரின் திரை செல்வத்தை திரையாக வாரியாக கப்பமாக அபகரிக்க போர்ச்சுகல் காவலை உடைத்து கடல் வழியாக உள்ளே நுழைந்து கடலோரத்தை கைப்பற்ற தீர்மானித்தான். முதற்கட்டமாக மன்னார் பரதவர்கள் போர்துகீசியருக்கு அளிக்கின்ற அத்தனை நிதி மற்றும் வரிகளுக்கும் இணையாக நாயக்க அரசுக்கு மாதத்தில் இரு நாட்கள் உழைப்பை தெறிப்பாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிக்கையிட்டான்.

இது போர்துகீசியருக்கும் மதுரை நாயக்க அரசாங்கத்துக்கும் இடையே பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை கண்டு கொள்ளாத தளபதி விதாலன் தன் குரோத சூட்சியின்படி கோழிக்கோடு சமாரியனின் மூர் படைகளை இரப்பாளி தலைமையில் கூட்டி கடல் வழி தாக்குதல் நடத்திடவும் நாயக்க படை கொண்டு தரை வழி தாக்குதல் தொடர்ந்திடவும் இடைப்பட்ட பரதவர்களை அடிமையாக்கி கடலோரத்தை கைப்பற்றிடலாம் என வெடலையில் பரவரும் மறவரும் காட்டிய போர் தந்திரத்தை அவர்களிடமே திருப்பி காட்ட துடிதுடித்தான். 

விதாலனின் அறிக்கை போர்துகீசியருக்கும் நாயக்க அரசாங்கத்துக்கும் இடையே ஆன ஒப்பந்தத்துக்கு எதிரானது என்று போர்துகீசிய தலைமை நாயக்க மன்னர் மதுரை பேச்சுவார்த்தை என்று அல்லாடி கொண்டிருந்தது ........ ஆனால் விதாலனின் விஷமத்தனத்தின் வாசனை பரதவ தலைவன் விக்ரம ஆதித்ய பாண்டியனாருக்கு எட்டியது. 

ஆனால் பரதவ வைரிகளின் அதிரடி தாக்குதல் என்று எங்கே எப்போது என்பது மட்டும் பரம ரகசியமாய் இருந்தது.........?  
(தொடரும்)

கடற்புறத்தான்

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.