Our Blog

இறால் வடை

தேவையான பொருட்கள்

இறால் - 15
கடலை பருப்பு - 1/4 கப் ஊறவைத்தது
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி&பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 3ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 கப் பொரிக்க


செய்முறை

முதலில் கடலைப்பருப்பை தண்ணீரை சுத்தமாக வடித்து மிக்சியில் அரைக்கவும்

பிறகு இறால் தவிர மேற்கண்ட எல்லாவற்றையும் மிக்சியில் பருப்புடன் போட்டு மைய்யாக அரையாமல் ஒன்றிரண்டாக இருக்குமாறு இரண்டு சுற்று சுற்றி எடுக்கவும்

அதனுடன் பொடியாக நறுக்கிய இறாலை சேர்த்து கலக்கவும்

இதனை வடைகளாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.