Our Blog

மொறு மொறு வாளை மீன் வறுவல்.




தேவையான பொருட்கள்:

  • வாளை மீன் - அரை கிலோ
  • எண்ணை - 100 மில்லி
  • சில்லி பவுடர் - 1 டீஸ்பூன்
  • மிளகு பவுடர் - அரை ஸ்பூன்
  • பூண்டு பல் தட்டிக்கொள்ள - 8 பல்.
  • கோதுமை மாவு - 1 டீஸ்பூன்
  • கடலை மாவு - 1டீஸ்பூன்
  • அரிசி மாவு - 1 டீஸ்பூன்
  • தயிர் - 1 டேபிள் ஸ்பூன்.
  • உப்பு - தேவைக்கு.
  • ரெட் கலர் - 1 பின்ச்

செய்முறை:

  • மீனை கழுவி சுத்தம் செய்து மஞ்சள் தூள்,உப்பு போட்டு அலசி வைக்கவும்.
  • பின்பு மீனில் சில்லி பவுடர்,மிளகு பவுடர்,பூண்டு,உப்பு,ரெட் கலர்,தயிர்,அரிசி,கடலை,கோதுமை மாவு வகைகளை சேர்த்து பிசறி வைக்கவும்.
  • அரைமணி நேரம் கழித்து நன்றாக காய்ந்த எண்ணையில் மொறு மொறுப்பாக பொரித்து எடுக்கவும்.
  • ருசியான வாளை மீன் வறுவல் ரெடி.இதனை ஆனியன் ரிங்,கருவேப்பிலை போட்டு அலங்கரித்து பரிமாறலாம்.

குறிப்பு:

  • வாளை மீனில் முள் வாளை,பெல்ட் வாளை என்று உண்டு.
  • பெல்ட் வாளை நடுமுள் மட்டும் இருக்கும்.
  • வெள்ளை நிறமாக மெத்தென்று இருக்கும்.
  • இதனை பயன்படுத்தினால் முள்பயம் இல்லாமல் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.