Our Blog

பரதவரின் வானியல்


அறிவியல் சார்ந்த நிலையிலேயே பண்டைத் தமிழர் தம் வாழ்க்கை நெறிமுறைகளையும், நாகரிகத்தையும், பண்பாட்டையும், மொழியையும் தோற்றி, சீர்படுத்தி, நிலைப்படுத்திப் போற்றி வந்துள்ளனர் என்பதைத் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது.

எடுத்துக்காட்டாக, பண்டைத் தமிழர் விண்ணியல் (வானவியல்) பற்றி அறிந்து தெளிந்திருந்தனர் என்பதைத் தமிழில் வழங்கும் விண்ணியல் சார்ந்த சில பெயர்களைக்கொண்டே மெய்ப்பிக்கலாம்! அவற்றுள் ஓரிரு சொற்களைக் காண்போம்.

இருள் - இரவு, கருமை; இருளின் கருமையால் எப்பொருளையும் பார்க்க இயலாது. என்ன பொருளென்று அறிய முடியாத பொருள் மயக்கத்தைத் தரும். அந்த இருளையும், மயக்கத்தையும் குறிக்கும் சொல் "மால்'.

வானத்தில் உள்ள முகிலும் அத்தன்மையதே. ஆதலால், "மால்' என்னும் சொல் முகிலையும் குறிக்கும் வகையில் தமிழர் ஆக்கிக்கொண்டனர். அச்சொல்லே வளர்ச்சியுற்று, மால் - மான் - மானம் என்றாகிப் பின் "வானம்' ஆனது. மானம் உலக வழக்கு; வானம் இலக்கிய வழக்கு.

வானம் - கரு முகில்; "ஒல்லாது வானம் பெயல்' (குறள்: 559). கருமுகில் மழையைப் பெய்வதால், அதுவே "மழை'க்கும் பெயரானது. வானம் - மழை; "வானம் வாய்க்க மண்வளம் பெருகுக' இவை சார்ந்த இடத்திற்கு "வானம்' பெயரானது. (மணிமேகலை: 19:149)

வானத்தில் உள்ள நாள்மீன்களையும், கோள்மீன்களையும் பலப்பல ஆண்டுகளாய் உற்று நோக்கியும், நுண்ணறிவால் உண்மை அறிந்தும், தெளிந்தும் வாழ்ந்த தமிழ்ப் புல அறிஞர்கள் ஏழு கோள்களின் பெயரால் ஏழு நாள்களையும், பன்னிரண்டு ஓரை (இராசி) களின் பெயரால் பன்னிரு மாதங்களையும் உலகின் பிற நாட்டாரும் மொழியாரும் வைப்பதற்கு முன்னே வைத்து வானவியல் அறிவைப் புலப்படுத்தியுள்ளனர்

சோதிடம் என்பதற்கும், முந்தையது வானவியல் இது பற்றித் பரவர்களுக்கு நிறையத் தெரிந்திருக்கிறது.

COMPUS எனும் திசைக்காட்டிக் கருவி கண்டு பிடிப்பதற்கு வெகு காலம் முன்பிருந்தே பரவர்கள் மிகவும் பிரபலமான கடலோடிகளாக வணிகர்களாக இருந்து கலங்களை உருவாக்கி உலகம் முழுவதும் சென்று பண்ட மாற்றம் செய்து வந்தனர். அவர்களுக்கு கடல் தாய் போன்றவள்.எப்படி எந்த மரத்தில் கப்பல் கட்டுவது? அதன் பாய்களில் எத்தனை விதம்? பாய்கள் எவ்வாறு அமைப்பது? காற்றின் போக்கும் வேகமும் என்ன? திக்குத் தெரியாத நடுக்கடலில் திசை காண்பது எப்படி? எப்போது புயல் வரும்? எங்கெங்கே சுழல்களும் நீரோங்களும் உள்ளன? எங்கிருந்து எந்த நட்சத்திரத்தில் கிளம்பினால் எப்போது எங்கு சென்றடைய முடியும்? எங்கெங்கு நல்ல குடி நீர் கிடைக்கும்? எத்தனை நாள் பயணத்துக்குப் பிறகு எந்த தீவினை அடையலாம்? என்பதனைத்தையும் வானவியல் துணை கொண்டு தான் கண்டு பிடித்தனர். கப்பல் சாத்திரம், நாவாய் சாத்திரம் என்றெல்லாம் ஒலைச் சவடிகள் நூலாக வெளி வந்துள்ளன. 

“வளி தொழில்”என்பது பரதவரின் கடல் மேலாண்மையைக் குறிப்பது. வளி என்றால் காற்று. எனவே தான் தை மாதத்தின் தொடக்கத்தில் காற்றில் ஏற்படும் மாறுபாடு அவர்களின் மரக்கலங்களை கடலில் கீழை நாடுகளை நோக்கி இயக்க வழிவகை செய்கிறது. இதன் காரணமாகவே தை பிறந்தால் வளி பிறக்கும் என்பது கடலோடிகளுக்கு உரிய சொற்றொடராகத் திகழ்கிறது......

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.