Our Blog

பரதர் மாதாவை நோக்கிய பாடல்


தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
தன்னரும் செந்தமிழ் தென்முனை குமரியும்
தலைபணி ஜெயராணி


தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
வெண்பனி இமயம் வெள்ளமாய் கங்கை
விமரிசை புரி ராணி 

தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
வங்கமார் கலிங்கம் கொங்கணம் மலையாளம்
குதுகலி சேர் மகாராணி 

தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
ஆந்திரம் குடகும் அகில மராட்டம்
ஆண்டிடு மகாராணி

தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
தாரணி பரதர் பாண்டியர் சேரர் 
சோழர் புகழ் ராணி

தயாபர ராணி தட்சணம் ஆள் ராணி
தடந்திகழ் மணிமுத்துத் துறை பரதவர்க்கொரு  
தகைமை சேர் மகராணி 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.