Our Blog

சீலா மீன் பிஸ்கேட்



தேவையான பொருட்கள்: 


சீலா மீன் - 10 துண்டுகள்

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

சிக்கன் மசாலா - ஒரு தேக்கரண்டி

உப்பு தூள் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு மேசை கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி

கார்ன் பிளார் மாவு - ஒரு மேசைக் கரண்டி

கடலை மாவு - ஒரு மேசைக் கரண்டி

அரிசி மாவு - அரை மேசைக் கரண்டி

எண்ணை - மீன் பொரிக்க தேவையான அளவு

எலுமிச்சை - ஒன்று


செய்முறை:
* மீனை சுத்தமாக கழுவி தோல் நீக்கி எடுத்து கொள்ள வேண்டும், மற்ற பொருட்களையும் தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

* எலுமிச்சை பழச் சாறில் எல்லா மசாலாக்களையும் ஒன்றாக பேஸ்ட் போல் குழைக்கவும். தேவைபட்டால் சிறிது தண்ணீரும் தெளித்து கொள்ளலாம்.

* மீனில் மசாலாவை நன்கு தடவி பிரட்டி வைக்கவும்.

* எல்லாவற்றையும் ஒன்றாக அடுக்கி பிரிட்ஜில் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

* ஒரு நான் ஸ்டிக் பேனில் தேவைக்கு எண்ணை ஊற்றி கொள்ளும் அளவு பொட்டு பொரிக்க வேன்டும். தீயை மீடியமாக வைத்து கொள்ள வேண்டும்.

* இரண்டு பக்கமும் நன்கு வெந்து மொருகலாக வரும் போது எடுக்க வேண்டும்.

* சுவையான மீன் பிஸ்கேட் ரெடி.


குறிப்பு

சிக்கன் மசாலா இல்லை என்றால் மிளகாய் தூளே போதுமானது.சிறிது மிளகு தூள் சேர்த்தாலும் நல்லா இருக்கும்.

மீன் படத்தில் சிறிது திக்கான மீனாக இருக்கு, இது இன்னும் மெல்லியதாக இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்.

பொரிக்கும் போது சிறிது பட்டர் எண்ணையுடன் சேர்த்து பொரித்தால் சுவை இன்னும் அபாரமாக இருக்கும்.

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.