Our Blog

சந்த செபஸ்தியார் பேரில் பாடல்

வேதசாட்சி முடிபுனை வேதியனே
பாதுகாவலனே மாசெபஸ்தியனே

பாதமலர்க் காவல் தந்து
ஏதமறவே புரந்து

காக்க கடனில்லையோ
கதி வேறிலையே - வேதசாட்சி

ராணுவத் தளபதியே
ஆணவ மிகு கொடியே

பேய் சங்கார வீரா
அமரா குமரா- வேதசாட்சி

தேவ திருமறை விளக்கே
பூவிலடியோரெமக்கே

காவல் தருமுனிவா
கனிவாய் வருவாய் - வேதசாட்சி

நிம்ப நகரின்பமுற
வெம்புதயர் துன்பமற

கண்பார் கண்ணியனே
அருள் பூசுரனே - வேதசாட்சி

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.