Our Blog

பரதவர்களின் கப்பல் கட்டும் தொழில் நுட்பங்கள்இன்று மிகச் சமீபமான வரலாற்றை உடைய நாடுகள் தங்களின் பாரம்பரிய பாய்மர கலம் கட்டும் தொழில்நுட்பத்தையும் அதனை பயன்படுத்திய விதத்தையும் மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். ஆனால் உலகின் மிகப்பழமையான "தொன்தமிழ் கடலோடிகள்" என்று பெயரெடுத்த "பரதவர்கள்" அந்த பாரம்பரிய அறிவினை இழந்து அதனை உணராமல் இருப்பது வேதனை. இங்கு தோண்ட தோண்ட புதையல்களாக கிடைக்கும் அளவுக்கு புதையல்கள் அதிகம். ஆனால் அதனை முன்னெடுத்து செல்லவோ மீட்டுருவாக்கம் செய்யவோ நல்மனங்கள் இல்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் எகிப்திலும் இஸ்ரேலிலும் எங்கு எங்கு என்று தேடித்தேடி அலைகிறார்கள். தொழில்நுட்பத்தை கையில் வைத்துக்கொண்டு துரும்பு கிடைத்தால் கூட அதனை ஆவணப்படுத்துகிறார்கள். அரசாங்கம் அதற்கான முழு உதவிகளையும் செய்கிறது.இன்று அறிவியலும் தொழில்நுட்பமும் மிக வளர்ந்துள்ள இவ்வேளையில் நாம் நம்முடைய மறக்கடிக்கப்பட்ட தொன்வரலாற்றை மீட்டெடுக்க வேண்டியுள்ளது. மற்ற நாட்டினரும் குடிகளும் இருவகை மரங்களை பயன்படுத்திய காலத்தில் "பரதவர்கள்" இருபது வகையான மரங்களை பயன்படுத்தி கப்பல் கட்டும் தொழிலை வளர்த்திருந்துள்ளனர். கடல் பயணத்தின் போது கப்பல் சிதைந்தால் கப்பல் மூழ்காவண்ணம் இருப்பதற்காக கப்பலின் அடிப்பகுதியை DECKING SYSTEM போல் கழற்றி விடும் வண்ணம் அடுக்குகளாக கட்டியுள்ளனர்."பரதவர்" கப்பற்கலை என்பது கப்பல் கட்டுவது, பராமரிப்பது, செலுத்துவது ஆகிய செயற்பாடுகளில் தமிழர்களின் தொழில்நுட்பத்தையும், ஈடுபாட்டையும் குறிக்கின்றது. தொன்மைக்காலம் தொட்டு "பரதவர்கள்" கப்பற்கலையிலும் கடல் பயணத்திலும் தேர்ந்து விளங்கினர். இத்துறை வல்லுனர்கள் கம்மியர் எனப்பட்டனர். "தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் கடலும் கலமும் சாதாரணமாய்ப் பிரயோகிக்கப்பட்டிருப்பதில் இருந்து, "பரதவர்கள்" கடலைத் தமது வாழ்க்கையில் ஒரு பகுதியாக அமைத்துக் கொண்டதை அறிகிறோம்" என்ற கடலோடி நூலின் ஆசிரியர் நரசய்யாவின் கூற்றில் இருந்து தமிழரின் ஆழ்ந்த கப்பற்கலை ஈடுபாட்டை அறியலாம்."பரதவர்கள்" கப்பல் கட்டும் தொழிலில் பழம்பெரும் முன்னோடிகள் என்பதற்கு CATAMARAN எனப்படும் கட்டுமரத்தின் சொல் ஆதார வரலாறே உதாரணம். ஆங்கிலேயர்கள் தங்கள் ஆட்சியின் போது தமிழர்களிடம் இருந்து "கட்டுமரம்" என்று எடுத்தாண்டதே CATAMARAN என்று உலகம் முழுவதும் பரவலாக உபயோகப்படுத்தும் சொல் எனத்தெரிகிறது. இது Free Dictionary (http://www.thefreedictionary.com/catamaran) வலைதளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.பரதவர், பரவர், அல்லது பரதர் என்போர், தமிழகத்தின் மிகப் பழமையான மக்கள் குழுமத்தில் ஒரு பிரிவினர்.முத்துக்குளித்தல்,மீன் பிடித்தல்,சங்கறுத்தல்,உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள்.பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன.பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன.பதினைந்தாம் நூற்ற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். பல சங்க இலக்கியங்கள் இவர்களைக் குறிப்பிடுகின்றன.

பழங்கால கப்பல்களின் பயணத்தின் போது இடி மின்னல் தாக்குதல் நிலத்தை விட ஆழ்க்கடல் பகுதிகளில் அதிகம். அப்படி பெரும்பான்மையான கப்பல்கள் மின்னல் தாக்குதலில் மாட்டும் பொது அவை உருத்தெரியாமல் அழிந்துவிடும் அளவுக்கு தீப்பிடித்து எரிந்துவிடும். ஆனால் "பரதவர்கள்" பயன்படுத்திய கப்பல்களில் அவர்கள் பயன்படுத்திய தொழில்நுட்பம் அவ்வாறு எரிந்துவிடாமல் கப்பல்களை காப்பாற்றி வந்துள்ளது.கடலில் செல்லும் போது அவர்கள் இடி தாக்காமல் இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்திய பொறிநுட்பம் கப்பலின் மைய அச்சாக பாய் மரத்தைத் தாங்கி செல்லும் மிக நீண்ட மரத்தின் இரு முனைகளையும் தாமிரம் கொண்டு மூடி இணைத்துள்ளார்கள். இந்த அமைப்பு நவீன மின்னணு மின்னியல் துறையில் செய்யப்படும் இரு முனை மின்னிறக்கம் Dipole Discharging போன்றது. இடியைத் தாங்கி அதனை கடலின் நீரில் இறக்கிவிடும். கலம் சேதாரமாகாது. இவை கூட அனுமானம் தான். உண்மையான பொறி நுட்பத்தினை அவர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள் என்பது ஆய்வு செய்து முழுமையாக வெளியிடவேண்டியது நம்முடைய பொறுப்பு.1933 இல் யாழ்ப்பாணத்தின் துறைமுகங்களின் ஒன்றான வல்வெட்டித்துறையில் இருந்து அன்னபூரணி என்னும் 133 அடி நீளமான பாய்க்கப்பல் பயணம் மேற்கொண்டு, வெற்றிகரமாக அட்லாண்டிக் கடலை கடந்து அமெரிக்கத் துறைமுகமான மசச்சூசெட்ஸ் இனை வந்தடைந்தது. இப்பாய்க் கப்பலானது யாழ்ப்பாணத்தில் கிடைக்கும் மரங்களைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டது. நாட்டுக்கோட்டை செட்டியார் ஒருவரின் வணிகக் கப்பலாகும். இதில் கவனிக்க வேண்டிய செய்தி அதன் ஆறு குழுவினர்களில் (குழு - Crew) ஒருவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாத்தா.

சங்க இலக்கியங்களும் பெரிப்புளுசின் எரித்திரியக் கடற்செலவு, தாலமியின் நிலவியல் கையேடு, பிளினியின் இயற்கை வரலாறு ஆகிய நூல்களும் தமிழகத் துறைமுகங்கள், கடற்கரை வணிக மையங்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன.

வாழ்ந்தது உயர்ந்து இருந்த நிலைகள் இன்று தாழ்ந்து இருந்தாலும் மீண்டும் உயரும். வரலாறு உணரப்படும். 

நன்றி பரதவர் பாண்டியன்

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.