Our Blog

பரதர் மாதாவின் பேரில் பாடல்

ம்மா ! அம்மா ! மூவுலகரசியே !

இயற்றியவர்: வித்தான் மரியான் சவியர் ஹென்றி லெயோன்



தாய் நீயே அல்லால் வேறெவருண்டம்மா
தாய் நீ பரதர் தம் தாய் நீயே
ஆய் நீ எமக்கிங் கனுக்கிரகம் செய்யும்
அனை நீ அல்லால் வேறெவருமுண்டோ

அம்மா ! அம்மா ! மூவுலகரசியே !
அநவரதமும் எமைக் காப்பாயே ! !

உலகத்தெமை வகுத்தளித் தமிழ் திடுமோர்
உவமை இல்லாத முப்பொருளொருவன்
அலகில் வரமுடை உனது திருச்சுதன்
அனை நின் வேண்டலை மறுப்பானோ
பாரினில் எய்திடும் பற்பல துயரம்
பரவர் தமக்கிங் கணுகாமல்
ஆர்வ மோடிரங்கி நற்றயை புரிந்தே
ஆதரிப்பது உன் கடனாமே

சந்திரனைத் திருப்பதத் தனிந்தாயே
சந்திர குலத்தவர்க் கடைக்கலமே
அந்தமுறு முனது தாள்துணை தந்தே
ஆட்கொள்வா யுனதடியாரை நீ

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.