Our Blog

தேவமாதா பேரில் பாடல்


ஜென்ம மாசில்லாத மரி
அன்னையே பேரின்பரச – 2 
கன்னியரே என்னுயிரே வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

மன்னன் தாவீது கோத்ரமே
வானரூபர்கள் தோத்ரமே – 2
பின்னமில் ஞானப் பாத்ரமே வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

ஏவை பெயரகற்று மாதே
எழிற்பிரகாச ரோஜாப்பூவே – 2
ஏசுவை ஈன்ற மாதாவே வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

தேவகதிக் கபாடமே
தேவுலகேறு மோடமே – 2
தேவத்திரித்துவ பீடமே வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க

ஆதிபிதாவின் சேயாரே
அமல சுதனின் தாயேரே – 2
நீ திஸ்பிரீத்துவின் நேயாரே வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க வாழ்க
வாழ்க வாழ்க 

No comments:

Post a Comment

Heritage Vembaru Designed by Vembarians | Copyright © 2014 - Published By Heritage Vembaru

Theme images by richcano. Powered by Blogger.